இளைய தளபதி விஜய் பிறந்த நாள் விழா சைதாப்பேட்டை சிஐடி நகரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.!!
தமிழக திரையுலகின் முன்னணி நடிகரும் உலகத்தமிழர்கள் போற்றும் ஒப்பற்ற நடிகர் விஜய் பிறந்த நாள் விழா சென்னை சைதாப்பேட்டை சிஐடி நகரில் ஏராளமான ஏழை மக்களுக்கு அன்னதானம், மற்றும் மோர் கோடைகால தண்ணீர் பிரச்சினை தீர்க்க தண்ணீர் கேன்களும், வழங்கப்பட்டன. இந்த நலத்திட்ட விழாவில் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தென் சென்னை மாவட்ட தலைவர் கே.வி.தாமு, தென்சென்னை மாவட்ட வடக்கு மாவட்ட தலைவர் கே.அப்புனு பிரமாண்ட கேக்கை வெட்டி பொது மக்களுக்கு வழங்கினார்கள் மேலும் தமிழ்நாடு இளைஞர் சங்க தலைவர் எம்.ஆர்.மதன், கே.வி.தாமு இணைந்து அன்னதானம், மோர் பாக்கெட்டுகள், தண்ணீர் கேன்களை வழங்கினர்.
சைதை பகுதி தலைவர் இ,ஜே.ஜே ராம், சிஐடி நகர் விஜய் மக்கள் இயக்க தலைவர் வி. முத்து, மற்றும் பகுதி நிர்வாகிகள், கிளை மன்ற நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்
