சோழிங்கநல்லூரில் ஃபோர்டு நிறுவனத்தின் தொழில்நுட்ப மற்றும் புதுமை மையத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவங்கி வைத்தார்.!!

தமிழகம் வணிகம்

சோழிங்கநல்லூரில்
ஃபோர்டு நிறுவனத்தின் தொழில்நுட்ப மற்றும் புதுமை மையத்தை
முதல்வர் எடப்பாடி துவங்கி வைத்தார்.!!

சென்னை.பிப் 7

சென்னை சோழிங்கநல்லூர்
ஃபோர்டு நிறுவனத்தில் உள்ள அதிநவீன தொழில்நுட்ப மற்றும் புதுமை மையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி துவங்கி வைத்தார். அப்போது,தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்,தொழில்துறை செயலாளர் முருகானந்தன் , ஃபோர்டு மேலாண்மை இயக்குநர் மைக்கேல் பிரிமியேர் ஆகியோர் இருந்தனர்.

இந்த தொழில் நுட்ப மற்றும் புதுமை மையமானது ஃபோர்டின் உலகளாவிய தொழில் நுட்பம் மற்றும் வர்த்தக மையத்தின் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வர்த்தக மையத்தின் பிரதான வளாகத்தினுள்ளேயே 150,000 சதுரஅடி பரப்பில் நிறுவப்பட்டுள்ள இந்த தொழில்நுட்ப மற்றும் புதுமை மையமானது பன்முக செயல்பாடுகளில் புதுமையை புகுத்துவதையும் தீர்வுகளை அளிப்பதையும் அதன் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.

அதிநவீன தொழில்நுட்பங்களை உள்ளடங்கிய இது குறிப்பாக ஆட்டோமோடிவ் உலகத்தின் கீழே குறிப்பிட்டுள்ள பிரிவுகளில் புதுமையான பரிசோதனை வழிமுறைகளை கொணர்ந்தளிக்க உள்ளது.
அதன் விபரம் வருமாறு :-

* நிகர்நிலை மாதிரிகள் மற்றும் பரிதோதனைக்கான சிமுலேஷன் லேப்கள்,
* மேம்பட்ட உற்பத்தி சிமுலேன்களுக்கு உதவும் வகையிலான நீட்டிக்கப்பட்ட, நிகர்நிலை நடப்பு,
* செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் மூலம் கற்றல் திறன்கள்,
* வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு, பரிசோதனைக்கான பாகங்கள் மற்றும் வாகன பரிசோதனையம்
புதிதாக துவக்கப்பட்டுள்ள இந்த தொழில்நுட்ப மற்றும் புதுமை வளாகத்தின் முக்கிய கவர்ச்சிகரமான அம்சம் மொபிலிட்டி எக்ஸ்பீரியன்ஸ் லேப் எனப்படும் நகர்வு அனுபவ பரிசோதனையகமாகும்.
எதிர்காலத்தில் போக்குவரத்தை பற்றிய ஃபோர்டின் கண்ணோட்டத்தின் அடிப்படையில் மக்களின் கருத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த பரிசோதனைக் கூடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் பணியாளர்களுக்கான மொபிலிடி தீர்வுகளுடனான ஆப் அடிப்படையிலான ஃபோர்டின் ஆஃபிஸ் ரைடு ஸிமுலேஷன்களை இந்த பரிசோதனைக் கூடம் கொண்டுள்ளது.

2018- ம் ஆண்டு மத்தியில் துவக்கப்பட்ட இது 5 மில்லியன் ரைடுகளைத் தாண்டி வெற்றிகரமான சாதனையைப் படைத்துள்ளது.கனெக்டிவிடி, மொபிலிடி, மற்றும் தானியங்கி வாகனங்கள் ஆகியவற்றை வழிநடத்தும் ஃபோர்டின் மொபிலிடி குழுவிற்கும் சென்னை வர்த்தக மைய வளாகத்தில் இடம் ‌உள்ளது.

28 ஏக்கரில் 2.5 மில்லியன் சதுர அடி பரப்பில் 10000- க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன், அமைத்துள்ள இந்த பிரம்மாண்ட வர்த்தக மைய வளாகமானது ஃபோர்டு தமிழ்நாட்டிற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை சிறப்பித்துக் காட்டுகிறது.

மேலும், மிக அதிக அளவிலான வேலை வாய்ப்புகளை சமுதாயத்திற்கு அளிப்பதன் மூலம் ஃபோர்டு நிறுவனத்திற்கு இந்தியாவிடம் உள்ள ஈடுபாட்டினை உறுதி செய்யும் விதத்தில் இது அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *