- பேருந்தில் காணாமல் போன செல்போனை 3 மணி நேரத்தில் கண்டுபிடித்து ஒப்படைத்த ஆயிரம் விளக்கு குற்றப்பிரிவு போலீசார்.!!
சென்னை ஜூலை 27
சென்னை நுங்கம்பாக்கத்தில் பஸ்ஸில் காணாமல் போன செல்போனை 3 மணி நேரத்தில் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த ஆயிரம் விளக்கு குற்றப்பிரிவு காவல்துறையினர். சென்னை பெரம்பூர் புது வாழை மாநகரை சேர்ந்தவர் திலிப் குமார் இவர் பணி நிமித்தமாக பெரம்பூரிலிருந்து 29C பேருந்தில் நுங்கம்பாக்கம் வந்தார் புட் கார்பரேஷன் இந்தியா பஸ் நிறுத்தத்தில் இறங்கி பார்த்த போது அவருடைய செல்போன் காணவில்லை அதிர்ச்சி அடைந்த அவர் தனது செல்போனை காணவில்லை என எப்.4 ஆயிரம்விளக்கு குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்றுக் கொண்ட ஆயிரம்விளக்கு குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெயலட்சுமி. ஆயிரம்விளக்கு குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் ராமலிங்கம், தலைமைக் காவலர் முத்துராமன் முதல் நிலை காவலர் குமரேசன் ஆகியோர் காணாமல் போன இடத்தில் விரைந்து விசாரணை மேற்கொண்டு 3 மணி நேரத்தில் செல்போனை கண்டுபிடித்தது செல்போன் உரிமையாளர் திலீப்குமாரிடம் ஆயிரம்விளக்கு குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெயலட்சுமி முன்னிலையில் செல்போனை ஒப்படைத்தனர். செல்போனை பெற்றுக்கொண்ட திலீப்குமார் விரைந்து தனது செல்போனை மீட்டுக்கொடுத்த ஆயிரம் விளக்கு குற்றப்பிரிவு போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.