தமிழ்நாடு மின்வாரிய சி.ஐ.டி.யு ஊழியர்கள் மத்திய அமைப்பு சார்பில் 15வது மாநாடு சேப்பாக்கத்தில் நடைபெற்றது.!!
சென்னை ஜூன் 5
தமிழ்நாடு மின்வாரிய சி.ஐ.டி.யு ஊழியர்கள் மத்திய அமைப்பு சார்பில் மத்திய சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிக்கையாளர் அரங்கில் தோழர் நாகேஸ்வரி நினைவரங்கத்தில் 15 வது திட்ட மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் மின்வாரிய மாநில திட்ட தலைவர் வி. சீனிவாசன், திட்ட துணை தலைவர் இ.ராஜசேகரன், அண்ணாசாலை கோட்ட செயலாளர் லூயிஸ், தியாகராய நகர் கோட்ட தலைவர் தியாகராஜன், தென்சென்னை மாவட்ட சிஐடியு செயலாளர் எம்.குமார், திட்ட செயலாளர் எஸ் கண்ணன் திட்ட பொருளாளர் எம் செந்தில்குமார், மத்திய அமைப்பு துணை செயலாளர் ஜெயசங்கர், மத்திய அமைப்பு பொது செயலாளர் எஸ்.ராஜேந்திரன், மத்திய அமைப்பு பொருளாளர் எம்.வெங்கடேசன், சென்னை வடக்கு மண்டல செயலாளர் ஆர். ரவிக்குமார், மத்திய அமைப்பு மாநில செயலாளர் எம் தயாளன் மத்திய அமைப்பு ஓய்வு பெற்றோர் நல அமைப்பு கே நடராஜன், தென்சென்னை கிளை-1 செயலாளர் ஏ. முருகானந்தன், தென் சென்னை கிளை 2 செயலாளர் டி அன்பழகன், தென் சென்னை வடக்கு கிளை ஜி. மதனகோபால், தென்சென்னை மேற்கு கிளை செயலாளர் எஸ். தசரதன், சென்னை ஜி.சி.சி செயலாளர் எம். முத்து, பொறியாளர் அமைப்புச் செயலாளர் ஆர். ஆடலரசு தனலஷ்மி, தோழர் எஸ் அனிதா, நன்றி உரை வழங்கிய அண்ணாசாலை கோட்ட தலைவர் பி. ரவி மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன (1) மின் துறையை பொது துறையாக பாதுகாத்திட வேண்டும். (2) 2014 மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற்றிட வேண்டும்.(3) புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்ஷன் திட்டம் தொடர வேண்டும், (4) கணக்கீட்டுப் பிரிவு கணக்குப் பிரிவு, நிர்வாகப் பிரிவு ஊழியர்களுக்கு தேவையான எழுது பொருட்களை மாதம் தோறும் தொடர்ந்து வழங்கிட வேண்டும். (5) மின் வாரியத்தில் உள்ள 50.000 க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களில் 35 .000 க்கும் மேற்பட்ட களப்பணி உதவியாளர் பணியிடங்களில் ஐ.ஐ.டி படித்தவர்களையும், ஒப்பந்த ஊழியர்களையும் கொண்டு நிரப்பிட வேண்டியும், (6) தளவாட சாமான்கள் தங்கு தடையின்றி வழங்க கோரியும், (7)பகுதி நேர பணியாளர் களை முழுநேர பணியாளர்களாக பணியமர்த்திடவும். (8) அவுட்சோர்சிங் பணியாளர்களின் ஊதிய விகிதத்தை உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அமல்படுத்த கோரியும் பல்வேறு தீர்மானங்கள் தமிழக அரசுக்கு வைக்கப்பட்டன. இந்த மாநாட்டில் நூற்றுக்கணக்கான சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.