இலங்கை பத்திரிக்கையாளர் சங்கத்தின் 64வது ஆண்டு நிறைவு விழா கொழும்புவில் நடைபெறுவதையொட்டி இந்திய உழைக்கும் பத்திரிக்கையாளர் சம்மேளனத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் இருந்து 15 பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். இதில் சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பாக 2 பேர் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் . கரு ஜெயசூர்யா இந்திய உழைக்கும் பத்திரிக்கையார் சம்மேளனத்தின் தேசிய செயலாளர் K.அசுதுல்லா, நிர்வாக குழு உறுப்பினர் K.J.பாலசுப்பிரமணியம் ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர். தமிழ்நாடு பத்திரிகையாளர்களை பாராட்டி பேசினார்.