உடல்நலக் குறைவால் அண்மையில் உயிரிழந்த சன் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் செந்தில் மறைவையொட்டி அவரது இல்லத்திற்கு சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், செந்திலின் மனைவி வசந்தி மற்றும் குடும்பத்தினரிடம் துக்கம் விசாரித்து, ஆறுதல் தெரிவித்தார். செந்தில் இறந்த சமயத்தில் பொதுக்குழு நடைபெற்றுக் கொண்டிருந்ததால், அப்போது செல்ல முடியாத ஸ்டாலின் அவர்கள், இன்று சென்று தனது பங்களிப்பை பதிவு செய்து, நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்