மலேசிய பிரபல தமிழ் வானொலியின் முன்னாள் அறிவிப்பாளரும் எழுத்தாளருமான பொன்.கோகிலத்தின் அகிலம் நீ புத்தக வெளியீட்டு விழா நடைபெறுகிறது.!!
மலேசிய பிரபல தமிழ் வானொலி அறிவிப்பாளரும் எழுத்தாளருமான பொன். கோகிலத்தின் முதல் பதிப்பான அகிலம் நீ .. புத்தக வெளியீட்டு விழா மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தோட்ட மாளிகையில் பிப்ரவரி மாதம் 2ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. நூல் வெளியீட்டு விழாவில் உலகமெங்கும் உள்ள தமிழ் பெண் ஆளுமைகள் இப்புத்தகத்தை வாழ்த்தி பேச வர உள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் மனநல ஆலோசகருமான இன்பா சுப்ரமணியன், சிங்கப்பூர் பெண் தொழில் முனைவரும்,தமிழ்ச் சங்க தலைவருமான விஜி ஜெகதீஸ்,உப்சி பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் முனைவர் மனோன்மணி தேவி அண்ணாமலை. மற்றும் மலேசியாவைச் சேந்த தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள், தமிழ்த்துறை மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர்.