ஹிந்து ஆன்மிக கண்காட்சியை ஒட்டி வண்ணமயமான முன்னோட்டம்!கங்கா காவேரி மங்கல தீர்த்த கலச யாத்திரை ஆயிரக்கணக்கான பெண்ககள் கலந்து கொண்டனர்.!!
புனித நீர்க்குடங்கள் ஏந்தி ஆடல் பாடலுடன் உற்சாக ஊர்வலம்!*
11-வது ஹிந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியின் தொடக்க விழா இன்று (நடைபெற்றது.
எந்த ஒரு நற்செயலை தொடங்குவதற்கு முன்பும் மங்கலகரமான சடங்குகளைச் செய்வது மரபு. இதன்படி, இன்று ஆன்மிகக் கண்காட்சியின் தொடக்கவிழாவை ஒட்டி காலை 10 மணிக்கு வேளச்சேரி தண்டீஸ்வரர் கோயிலில் இருந்து குருநானக் கல்லூரி வரை கங்கா காவேரி மங்கல தீர்த்த கலச யாத்திரை நடைபெற்றது.
மணிலால் மேத்தா குஜராத்தி பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைவர் டாக்டர்.என்.ஆர்.தவே யாத்திரையைத் தொடங்கி வைத்தார்.
வட இந்திய முறைப்படி பாரம்பரிய உடையணிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கங்கை மற்றும் காவிரி நீர் நிரப்பிய குடங்களை தலையில் சுமந்தபடி ஊர்வலமாகச் சென்றனர்.
வட இந்திய கலாச்சாரப்படி ’ராஸ் கர்பா’ எனப்படும் முறைப்படி ஆடல் பாடல்களுடன் பெண்கள் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.
ஹிந்து ஆன்மிக கண்காட்சியின் 6 அடிப்படைப் பண்புகளை வலியுறுத்தும் பதாகைகளை பெண்கள் ஏந்திச் சென்றனர்.
ஊர்வலம் குருநானக் கல்லூரியை அடைந்ததும் அங்கிருந்த குளத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.
கங்கை மற்றும் காவிரி இணைப்பை குறியீடாகக் கொண்டு இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உற்சாகமாக நடனமாடி சென்றதை பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர்.