சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின் 34வது ஆண்டு விழா. பள்ளி மாணவ மாணவிகளின் கண்கவர் நடன நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது.!!
சென்னை பிப்ரவரி1
சென்னை அடையாறு ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின் 34வது ஆண்டு விழா. பள்ளி மாணவ மாணவிகளின் கண்கவர் நடன நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது. குமாரராணி டாக்டர் மீனா முத்தையா அவர்களின் சீரிய முயற்சியாலும் செம்மையான வழிகாட்டலாலும் சீரோடு சிறப்போடும் அவர்கள் உருவாக்கி வைத்துள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் எனும் கல்விக்கூடம் கலை கல்வி எனும் இரு கண்களால் மாணவர்களுக்கு சிறந்த பாதையை காட்டிக் கொண்டிருக்கிறது. செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின் 34வது ஆண்டு விழா சனிக்கிழமை மாலை பள்ளியில் உள்ள குமாரராஜா எம் ஏ.எம் கலை அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி பல்வேறு பாடப்பிரிவுகளில் முதலிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறையின் முன்னாள் செயலர் எம்.எஸ். ஸ்ரீனிவாசன் பரிசுகளை வழங்கியும் பள்ளியின் 34ம் ஆண்டு விழா மலரை வெளியிட்டும் சிறப்புரையாற்றினர். ஒப்பற்ற சாதனையாளர்கள் எனும் தலைப்பில் கலை நிகழ்ச்சிகளும் கோலாகலமாக நடைபெற்றன. அன்னை குமாரராணி மீனா முத்தையா அவர்களின் வாழ்க்கையை நாட்டிய நாடகமாக நடத்தினர். மேலும் கர்மவீரர் காமராஜரை பற்றிய நாடகமும் இசைஞானி இளையராஜாவின் பாடல்களை மாணவ மாணவிகள் சிறப்பாக நடனம் ஆடினர்.
இந்நிகழ்ச்சியில் செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின் முதல்வர் அமுத லட்சுமி, துணை பள்ளி முதல்வர்கள் தரணி கணேசன், அஞ்சனா. மற்றும் இந்த பிரமாண்ட ஆண்டுவிழாவில் ஏராளமான முக்கிய விருந்தினர்கள். பள்ளி மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள் கலை நிகழ்ச்சிகளைப் பார்த்து மிகவும் பிரமிப்பு அடைந்தனர்.