தமிழ் சினிமாவில் நீண்டஇடைவெளிக்கு பின் ஒரு கண்ணியமான படம் என்று சொன்னால் அது கடைக்குட்டி சிங்கம் என்று மார் தட்டி சொல்லலாம். எந்த வித ஆபாசம் இல்லாமல் குடும்படித்தோடு கட்டாயம் பார்க்கவேண்டிய படம். பாசம் கூட்டு குடும்பம் எல்லாம் அழிந்து போகும் காலத்துக்கு இது ஒரு முட்டுக்கட்டை என்றும் சொல்லலாம். இது அரசியல் படமா காதல் படமா விவசாயம் படமா இல்லை குடும்ப படமா இல்லை நகைசுவை படமா என்று கேட்டால் எல்லாம் உள்ள ஒரு தரமான படம் என்று தான் சொல்ல வேண்டும். காரணம் எல்லா விஷயங்களையும் அளவோடு அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். படம் ஆரம்பித்த முதல் கடைசி காட்சி வரை மக்களுக்கு தேவையான விஷயங்களையும் படத்தின் கதைக்கு தேவையான பாதையை விட்டு நகராமல் மிக சிறப்பாக எல்லா விஷயங்களும் மிக யதார்த்தமாக கூறியுள்ளார்.
கார்த்தி இப்படி ஒரு மாமன் இப்படி ஒரு மகன் இப்படி ஒரு அண்ணன் இப்படி தம்பி நமக்கு கிடைப்பானா என்று ஏங்க வைக்கும் ஒரு கதாபத்திரம். கதைக்கு என்ன தேவையோ அதை புரிந்து மிக அற்புதமான ஒரு நடிப்பு. கார்த்தி ஒரு யதார்த்தமான ஹீரோ. எந்த கதைக்கு என்ன தேவையோ அந்த கதைக்கு தன்னை மாற்றி கொள்ளும் திறமை இவரிடம் அதிகம். அதுவே இவரின் வெற்றி. இவர் நடித்த கிராமப் படங்கள் எல்லாமே மிக பெரிய வெற்றி அந்த வகையில் கார்த்திக்கு இந்த படம் மிக பெரிய வெற்றி படமாக அமையும். கார்த்தி நடிப்பு இந்த படத்தில் ஒரு படி மேல் என்று தான் சொல்லணும் விவசாயத்தை பற்றி கல்லூரியில் பேசும் போதும் சரி, கிளைமாக்ஸ் காட்சியிலும் எங்கு தன் குடும்பம் பிரிந்து விடக்கூடாது என்று போராடும் போதும் சரி அருமையான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். இந்த கதைக்கு மிக பெரிய பலம் வசனம் அந்த வசனங்கள் மிகவும் அழுத்தம் திருத்தமாக பேசி உயிர் கொடுத்து இருக்கிறார் . சத்யராஜ் சொல்லவா வேணும் அடேங்கப்பா இரண்டு கதாபாத்திரம் இளமை சத்யராஜ் அப்பா சத்யராஜ் இரண்டிலும் சும்மா விளையாடி இருக்கிறார். இளமை கதாபாத்திரத்தில் வில்லன் கலந்த ஒரு தோற்றம். ‘மகன் தான் வேணும் அதற்கு என்ன வேணும் என்றாலும் செய்வேன் எத்தனை திருமணம் வேண்டும் என்றாலும் செய்வேன்’ என்ற ஒரு பாத்திரம் அப்பா வேடம் பொறாமை பட வைக்கும் ஒரு பாத்திரம். கார்த்தியின் அம்மாவாக வரும் விஜி சந்திரசேகர் மற்றும் பானுப்ரியா இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர் அதோடு மகனுக்காக சண்டை போடும் விஜி நடிப்பில் ஒரு படி மேலே நிற்கிறார். பானுப்ரியா என் மகள் வயிற்றுப் பேத்தியைத் தான் திருமணம் செய்யவேண்டும் என வீம்பு பிடிக்கும் போது மேலும் ரசிக்க வைக்கிறார்.