இயேசு அழைக்கிறார் அமைப்பின் சார்பில்
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை செய்தார் பால் தினகரன்.!!
சென்னை.பிப்.2-
சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள சென்னை கிறித்துவ கல்லூரி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில்,
பொதுத்தேர்வு மற்றும் ஆண்டு இறுதி தேர்வு எழுதக்கூடிய மாணவ, மாணவியருக்காக “இயேசு அழைக்கிறார்” அமைப்பின் சார்பில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.
இந்நிகழ்வில்,
இயேசு அழைக்கிறார் அமைப்பின் தலைவரும் காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தருமான டாக்டர் பால் தினகரன், தேர்வுகளுக்கு நம்பிக்கையோடு ஆயத்தமாகி தைரியமாக எதிர்கொள்வது எப்படி என்பது குறித்தும் இறைநம்பிக்கையின் பங்கு குறித்தும் சொற்பொழிவு ஆற்றினார்.
பின்னர், கூடியிருந்த ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர்களுக்கு பால் தினகரன் பிரார்த்தனை செய்தார்.
முன்னதாக, கோயமுத்தூர் காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக மாணவ, மாணவியர் பாடல் பாடி, குறுநாடகமும் நடத்தினார்கள்.
பின்னர்,
இவ்விழாவிற்கான சிறப்பு மலர் இயேசு அழைக்கிறார் அமைப்பின் தலைவர் பால் தினகரன் வெளியீட அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.
கடந்த வருட தேர்வுகளில் உயர்ந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியரோடு சாமுவேல் பால் தினகரன், உரையாடி சாதனை புரிந்தவர்களின் அனுபவங்களை விளக்கமாக கேட்டு, தேர்வு பயத்தை மேற்கொள்வதற்கு இறைநம்பிக்கை எப்படி உதவுவது என்பது குறித்து பேசினார். ஷேரன் ஏஞ்சல், பல்வேறு மேற்கோள்களை மாணவ மாணவியரை உற்சாகப்படுத்தினார்.
நிகழ்ச்சியில், சென்னை கிறித்துவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் ஜி.ஜே.மணோகர் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும், அவர்களது பெற்றோர், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
மேலும், பிரார்த்தனை கூட்டத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் இலவசமாக “புதிய ஏற்பாடு” (பைபிள்) வழங்கப்பட்டது.
பின்னர், நிருபர்களிடம் பால் தினகரன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு இயேசுவுன் கிருபை கிடைக்கவும், பயம், பதட்டமின்றி மாணவர்கள் தேர்வை நன்றாக எழுதி வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கிலும் தொடர்ந்து 33 ஆண்டுகளாக இந்த பிரார்த்தனை செய்து வருகிறோம். மேலும், இந்த நிகழ்வில் சென்ற ஆண்டுகளில் நடந்த பிரார்த்தனைகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவர்களை அழைத்துவந்து மாணவர்கள் மத்தியில் பேச வைப்பதால் அது அவர்களுக்கு நல்ல நம்பிக்கையை விதைக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார். இந்த பிரமாண்ட பிரார்த்தனை நிகழ்ச்சியில் அண்ணாாா பல்கலைக்கழக மன்னர் ஜவகர் கலந்து கொண்டார்