பேரறிஞர் அண்ணாவின் 51வது நினைவு நாளையொட்டி  அமைச்சர் டி ஜெயக்குமார் ராயப்பேட்டையில் உள்ள  சித்தி புத்தி விநாயகர் கோவிலில்  நடந்த  சமபந்தி விருந்தில்  கலந்து கொண்டார்.!!

தமிழகம்

 

பேரறிஞர் அண்ணாவின் 51வது நினைவு நாளையொட்டி  அமைச்சர் டி ஜெயக்குமார் ராயப்பேட்டையில் உள்ள  சித்தி புத்தி விநாயகர் கோவிலில்  நடந்த  சமபந்தி விருந்தில்  கலந்து கொண்டு ஏழைகளின் உணவு சாப்பிட்டார். இந்த சமபந்தி விருந்தில் முன்னால்முன்னாள் மாமன்ற உறுப்பினர் டி.சிவராஜ், மலர் மன்னன் ஆகியோர் கலந்து கொண்டனர்  சமபந்தி விருந்து .முடிந்ததும் இராயபேட்டையில் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பிரதாச் கிஷோர் ஆதரவை நாடி உள்ள
எம்.கே.எஸ் ஸ்டாலின் என்பவர் பி.கே.ஸ்டாலின் என்று இனிமேல் அழைக்கப்படுவார்.
திமுகவினர்
அவர்கள் மீது நம்பிக்கை இல்லை. என்பதால் தான் வடமாநிலத்தில் இருந்து பிரகாஷ் கிஷோர் அழைத்துள்ளனர்.
நாங்கள் மக்களை நம்பி இருக்கிறோம்.
திராவிட முன்னேற்றக் கழகம்
கட்சி அல்ல காப்ரேட் கம்பெனி.
மக்களின் நாடி துடிப்பை பற்றி தெரிந்த கட்சி அதிமுக அதனால் தான் தொடர்ந்து வெற்றி பெற்று இருக்கிறது.
அண்ணா கற்றுகொடுத்தை எம்.ஜி.ஆர்.ஜெயலலிதாவை தொடர்ந்து நாங்கள் பின்பற்றி வருகிறோம்.
பிரசாத் கிஷோருக்கு சம்பளம்
1.86 லட்சுத்து கோடி கொடுக்கிறார்கள்.
அதை, திமுகவில் உள்ள
கிளை செயலாளருக்கு 1 லட்சம் கொடுக்கலாம்.
தமிழ்நாட்டில் திமுகவிற்கு ஒரு பருப்பும் வேகாது.
ஒளிவு மறைவு இல்லாமல் டின்பிஎஸ்இ முறைகேட்டில் ஈடுப்பட்டவர்களை கைது செய்யப்படுகிறார்கள்.

டின்பிஎஸ்இ முறைகேடு குறித்து
தயாநிதி மாறன்
புளுகு மூட்டையை அவித்து விடுகிறார்.
நீதிமன்றத்தில் வந்து தயாநிதி மாறன் பதில் சொல்வார்.
டிஎன்பிஎஸ்இ முறைகேடு குறித்து
சிபிசிஐடி விசாரணை சரியாக சென்று கொண்டு இருக்கிறது.
கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறைக்கு செல்வார்கள்.

கேள்வி :-
டிஎன்பிஎஸ்இ அலுவலகத்தை நாளை உதயநிதி ஸ்டாலின் முற்றுகையிட போகிறார் என்ற கேள்விக்கு
பதில் :-
அவர் இருப்பதை காட்டுவதற்காக போராட்டம் நடத்துகிறார்.
அதனால் ஒன்றும் இல்லாத விஷயத்தை கையில் எடுக்கிறார்.
டின்பிஎஸ்இ சிஸ்டத்தில் எந்த பிரச்சனையும் இல்லை.
விளம்பரத்திற்காக திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவிக்கிறார்.
என்னை பொருத்தவரை
அரசியலே ஒரு குத்துச்சண்டை தான்.
டிஎன்பிஎஸ்இ முறைகேட்டில்
கடைநிலை ஊழியர், உயர் நிலை ஊழியரும் ஒன்று தான் டஅனைவரும் தண்டிக்கப்படுவார்கள்.
பொத்தான் பொதுவாக டிஎன்பிஎஸ்இ முறைகேடு குறித்து ஆர்எஸ்.பாரதி கருத்து தெரிவிக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *