மத்திய அரசு கொண்டு வந்துள்ள சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த போராட்டங்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கள் தொடர் சர்ச்சை எழுப்பியது. மேலும் மதகுருமார்கள் தான் போராட்டங்களை தூண்டி விடுவதாக ரஜினிகாந்த் தெரிவித்தார். ரஜினியின் இந்த குற்றசாட்டு தொடர்பாக தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் அறிக்கையும் , ரஜினிக்கு கடிதம் எழுதியிருந்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உலமாக்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இந்த சட்டங்கள் தொடர்பாக நேரில் சந்தித்து விளக்க உலமாக்கள் தெரிவித்ததை ஏற்ற ரஜினிகாந்த், இன்று காலை தனது இல்லத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபைகளை சந்தித்து பேசினார். அப்போது உலமாக்கள் இந்த சட்டத்தால் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்தும், அதில் கேட்கபடும் கேள்வி குறித்தும் தெளிவாக விளக்கினர். இந்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு மட்டும் பாதிப்பு இல்லை என்பதையும், இந்து உட்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கபடுவார்கள் என்று ஆதாரத்துடன் உலமாக்கள் ரஜினிக்கு எடுத்துரைத்தனர். மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பை இஸ்லாமி யர்கள் எதிர்க்கவில்லை என்றும், அதில் புதிதாக கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கே அச்சத்தை ஏற்படுத்துவதை விரிவாக உலமாக்கள் கூறினார். தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் விளக்கத்தை கேட்டு ரஜினிகாந்த் ஆடி போனார். ரஜினியை சந்தித்த பின் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர்
மவ்லவி காஜா மொய்தீன் பேட்டிஎங்களுடைய நியாயங்களை கூறினோம், அதனை அவர் உணர்ந்துகிட்டார்
CAA ,NRC போராட்டங்கள் குறித்து ரஜினிகாந்த் அவர்களிடம் எடுத்துச் சொன்னோம்.. ரஜினி புரிந்து கொண்டார்.
நாட்டில் அமைதியை ஏற்படுத்த என்னால் ஆன அனைத்து வகை முயற்சிகளையும் எடுப்பேன் என ரஜினிகாந்த் எங்களிடம் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.