ஆட்டோவில் தவறவிட்ட பையை 1 மணி நேரத்தில் ஒப்படைந்த ஆட்டோ டிரைவர்
பாராட்டு குவிகிறது…!
சென்னை.செப்-14
பங்களாதேஷ், சிட்டா காங்
பகுதியை சேர்ந்தவர் முகமது ராஷேத் (வயது 30) இவர் இம்மாதம் 1-ம் தேதி அவரது சொந்த ஊரில் இருந்து உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக சென்னையில் உள்ள
அப்போலோ மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு அவர் தங்கியிருக்கும் ரூமிலிருந்து ஆட்டோவில் மருந்துவமனைக்கு வந்தார்.அப்போது ஆட்டோவில் அவரது பையை தவறவிட்டார்.
அதில் அவர் வைத்திருந்த பாஸ்போட், 500 அமெரிக்க டாலர் ஆகியவை இருந்துள்ளது.
இதுகுறித்து, ஆயிரம் விளக்கு போலீசாரிடம்
முகமது ராஷேத் புகார் அளித்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை வந்த நிலையில் ஹரிகிருஷ்ணன் என்ற ஆட்டோ டிரைவர் ஆட்டோவில் தவற விட்ட பையை எடுத்து வந்து 1 மணி நேரத்தில் காவல் நிலையத்தில் வந்து ஒப்படைத்தார். ஆட்டோ டிரைவரை ஆயிரம்விளக்கு காவல்நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெயலட்சுமி பாராட்டி வெகுமதி வழங்கினார்.