மனிதநேயஜனநாயக கட்சிசார்பில் தமிழகம் முழுவதும் இணையவழி போராட்டம்நடைபெற்றது.வெளிநாட்டில் வாழும் தமிழர்களைகட்டணம் இல்லாமல் தாயகம் அழைத்து வர மத்திய மாநில அரசை வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமீம் அன்சாரி எம்.எல்.ஏ அவர்கள் ஆணைக்கிணங்க இன்று மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக மாவட்ட செயலாளர் பிஸ்மில்லா கான் தலைமையில் திருவல்லிக்கேணி ஐஸ்அவுஸ் மாவட்ட அலுவலகம் முன்பு எதிர்ப்பு பதாகைகளை ஏந்தி இணையவழி போராட்டம் நடைபெற்றது இதில் மனிதநேயஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் சமூக இடைவெளி விட்டு கலந்து கொண்டனர்.