தமிழகம் முழுவதும் இன்று 6 வது நாளாக செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்து போராட்டம்.!!
மருத்துவ பணிகள் தேர்வாணையம் (எம்.ஆர்.பி) மூலம் தமிழக அரசால் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்த முறையில் அரசு மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைபங்களில் பணி செய்யும் செவிலியர்கள். தமிழ் நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் செயற்குழு முடிவின்படி காலமுறை ஊதியம் மற்றும் பணி நிரந்தரம் கோரி அரசை வலியுறுத்தி அமைதியான முறையில் 25/ 5 /2020 முதல் 30 /5/2020 வரை தங்கள் பணியிடத்தில் *இன்று 6வது நாளாக* தமிழகம் முழுவதுமுள்ள ஒப்பந்த செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்கின்றனர்.
தமிழக அரசு இந்த நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இதற்கு அரசு செவிசாய்க்காவிடில் மேலும் அடுத்தகட்ட நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மாநிலம் தழுவிய ஒவ்வொரு மாவட்டந்தோறும் ஆர்பாட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டம் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
செவிலியர்களின் உயிர்காக்கும் இந்த தன்னலமற்ற சேவையை கருத்தில் கொண்டு செவிலியர்கள் வாழ்வாதாரம் மேம்பட அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் கேட்டு இச்சங்கம் வலியுறுத்துகிறது.