கேரளாவில் கோழிக்கோடு விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஓடுபாதையில் இருந்து சறுக்கியதால் விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 174 பயணிகள் உட்பட 190 பேரில் 16 பேர் உயிரிழந்தனர். இரண்டு விமானிகளும் இந்த விமான விபத்தில் உயிரிழந்தனர். மழையால் தரையிறங்கிய பின் விமான ஓடுபாதையில் இருந்து விமானம் சறுக்கி முழு வேகத்தில் அருகில் இருந்த 35 அடி பள்ளத்தில் விழுந்து விமானம் இரண்டாக உடைந்ததாக தெரிகிறது. கொரோனா காரணமாக தாய்நாடு திரும்புபவர்களை ஏற்றிக் கொண்டு நாடு திரும்பியது இந்த விமானம்.
