புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் உண்மை விசுவாசி அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேனுக்கு தமிழ் சுடர் விருது வழங்கினார் முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன்.!!

தமிழகம்

றபுரட்சித்தலைவர் எம்ஜிஆரின் உண்மை விசுவாசி அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேனுக்கு தமிழ் சுடர் விருது வழங்கினார் முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன்.!!

சென்னையில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளரும் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின்உன் விசுவாசியுமான தமிழ்மகன் உசேனுக்கு அவரது சமூக சேவையை பாராட்டி தமிழக நக்கீரர் தமிழ்ச்சங்கம் மற்றும் மீடியாநியூஸ் இணைந்து தமிழ்ச்சுடர் விருது வழங்கியது.சென்னை சாய்பாபா ஆடிட்டோரியத்தில் தமிழ் விழா 2020 நிகழ்ச்சி நடைபெற்றது.அவ்விழாவில் அகில உலக பத்திரிகை ஊடக சங்கம் மற்றும் தேசிய மனிதநேய உலகளவில் அமைதி கூட்டமைப்பு இரு அமைப்பின் சார்பில் அனைத்துலகஎம்ஜிஆர் மன்ற செயலாளரும் கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினருமான டாக்டர் தமிழ்மகன் உசேன் அவர்களது 67 வருடசமூக சேவையை பாராட்டி இந்த இரு அமைப்பின் சார்பில் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை முன்னாள் அமைச்சரும் திட்டக் கமிஷன் துணை தலைவரும்கழக அமைப்பு செயலாளருமான சி.பொன்னையன் வழங்கினார்.இவ்விழாவுக்கு திரைப்பட இயக்குனரும் நடிகரும் தமிழக நக்கீரர் தமிழ்ச்சங்க துணைத் தலைவர் கவிஞர் முனைவர் யார் கண்ணன் தலைமை வகித்தார். இறைவன் எம்ஜிஆர் பக்தர் பேரவை தலைவர் எம்.தமிழ்நேசன் முன்னிலை வகித்தார்.நக்கீரர் சங்க பொதுச் செயலாளர் பாஸ்கரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.சீரும் சிறப்புமாக நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இதயக்கனி விஜயன் மராட்டிய மாநில அதிமுக பொருளாளர் மும்பை கணேசன்,கர்நாடக மாநில பெங்களூர் அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை தலைவர் க.பழனி,எம்ஜிஆர்மன்ற பொருளாளர் கேரள எஸ் எம்.பிள்ளை,மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர்கள் சேவல் ஜி.எம்.குமார் (கடலூர்) எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள் ஆர்.வி. செல்வகுமார், கே.ராஜ் முஹம்மது, தி. நகர் பகுதி செயலாளர் மு. உதயா,திருவருட்பேரவை தலைவர் நெல்லை நசீர்,கழக பேச்சாளர் எம்ஜிஆர் பித்தன்,கலில் பாஷா(திருவண்ணாமலை) கோவை ஹாஜி சிராஜூதீன்,தென்சென்னை தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் வி.சதாசிவம்,ஓட்டுனர் சங்க பேரவை தலைவர் ஆரணி குணசேகரன்,வானிலை எம்ஜிஆர் பக்தர்கள் பேரவை ஆலோசகர் சண்முகசுந்தரம்,பாரத மக்கள் வார இதழின் ஆசிரியர் எம்.ராஜா ஆகியோர் பேசினர்.தமிழக நக்கீரர்தமிழ் சங்க செய்தி தொடர்பாளர் எஸ்.செல்வரகு நன்றி கூறினார்.மேலும் இவ்விழாவில் மதுரை புறநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னாள் மாவட்ட செயலாளர் வி.டி. மணி,தென்சென்னை வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணை செயலாளர் எஸ்.என்.ஆர்.ராஜேஷ்,நாகூர் சிறுபான்மை நல பிரிவு தலைவர் டிரஸ்டி ஜி.எஸ்.கே.செய்யாது மீரான்,கோவை சமூக சேவகர் முகமது ரபிக்,விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள் அப்துல் ஹமீத்,அம்மா பிரியன்,முகம்மது சேட்,எம்ஜிஆர் முகமது இஸ்மாயில், ஜிம் குமார்,தென்சென்னை பைகுதீன் இளைஞர் பாசறை எஸ்.வினோத்,ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *