மலேசியாவில் நயன்தாரா சாயலில் இருக்கும் தமிழ் நடிகை பிரியா பாலகிருஷ்ணன் நயன்தாரா பாடல்களை டிக் டாக் வீடியோவில் நடித்து அசத்தி வருகிறார் !!
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் பிறந்த வளர்ந்த தமிழ் நடிகை பிரியா பாலகிருஷ்ணன் இவர் மாடலிங், நடிப்பு துறை மற்றும் தமிழ் அறிவிப்பாளராக பணிபுரிந்துள்ளார்.இவரது தந்தை பாலகிருஷ்ணன் அந்த காலகட்டத்தில் மலேசியா மேடை நாடகங்களிலும் மற்றும் இன்னிசை கச்சேரி கோவில் திருவிழாக்களிலும் மிக சிறந்த பாடல்களை பாடி உள்ளார். இவரது மகளான பிரியா பாலகிருஷ்ணன் மலேசிய திரைப்படம் குறும்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த முதல் தமிழ் குறும்படமான பார்வை இந்தியாவில் சைமா குறும்பட விருது இயக்குனர் எஸ்.மதன் வாங்கினார். அதே இயக்குனர் தயாரித்த தமணி தமிழ் படமும் இந்திய அனைத்துலக தமிழ் திரைப்பட விழாவில் சென்னை தேவி தியரங்கில் திரையிடப்பட்டது. இந்த இரு படங்களிலும் நடிகை பிரியா பாலகிருஷ்ணன் நடித்துள்ளார்.நடிகை நயன்தாராவின் சாயலில் இருக்கும் இவர் நயன்தாராவின் தீவிர ரசிகை இவர் நாயன்தாரா பாடல்களை அவரது உடை அலங்காரத்துடன் ஏராளமான டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இவரின் டிக் டாக் வீடியோக்கள் மலேசியாவில் உள்ள தமிழர்களிடையே பிரபளம் அடைந்துள்ளது. இவர் தற்போது டிபி2 என்ற தமிழ் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இவர் மலேசியாவில் உள்ள ஆடை நிறுவனங்களுக்கும் நடித்து கொண்டிருக்கிறார். இவர் மலேசிய நயன்தாரா தலைமை மன்றத்தை துவக்க உள்ளார் இவருடை தீராத ஆசை ஒருமுறையாவது நடிகை நயன்தாராவை சந்திக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்ள்ளார். இவர் மேன்மேலும் சாதனைகள் படைக்க தமிழ் ஒலி வாழ்த்துகிறது.
மலேசிய தமிழ் நடிகை பிரியா பாலகிருஷ்ணன்
https://www.facebook.com/profile.php?id=100011228373631