பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சார்பில் ஏழை பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வழங்கினார்.!!
சென்னை ஜனவரி 11
பத்திரிகை போட்டோகிராபர்கள் சார்பாக 9வது ஆண்டாக இன்று அம்பத்தூர் முகப்பேரில் உள்ள தொடக்க பள்ளியில் 130 பள்ளி குழந்தைகளுக்கு சீருடை,ஜாமின்ரி பாக்ஸ்,முக கவசம், கரும்பு, இவற்றை சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர் சங்கம்செயலாளர் பாரதி தமிழன்,தலைமையாசிரியர் கிருஷ்ணவேணி மற்றும் போட்டோகிராபர்கள் சங்க நிர்வாகிகள்,உறுப்பினர்கள்கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பள்ளி குழந்தைகள் கைகளை நன்றாக கழுவ வேண்டும் முக கவசம் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியுடன் இருக்க வேண்டும் என பள்ளி மாணவ மாணவிகளுக்கு அறிவுறுத்தினார்.இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிர்வாகிகள் கூறுகையில் திரு ராதாகிருஷ்ணன் அவர்கள் மிகுந்த பணிக்கு இடையில் நேரம் ஒதுக்கி இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்தமைக்குநெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என அவர்கள் கூறினர்