வழிபாட்டு தலங்களை இரவு 10 மணி வரை திறந்திருக்க அரசு அனுமதி வழங்க வேண்டும்.
த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் அவர்கள் வலியுறுத்தல்.!!
இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
இந்தியாவில் கடந்த வருடம் கொரானாவின் பரவல் ஆரம்பித்து அனைத்து தரப்பு மக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.
நாம் பெரிதும் நேசித்த உறவினர்களையும், நண்பர்களையும், தலைவர்களையும் இழந்தோம்.
மத்திய, மாநில அரசுகளின் தொடர் முயற்சியாலும், கட்டுப்பாடுகளாலும், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், மற்றும் அதிகாரிகளின் தீவிர பணியாலும் கரோனா மெல்ல மெல்ல கட்டுப்படுத்தப்பட்டது.
ஆதனால் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன.
ஆனால் தற்பொழுது தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் கரோனாவின் இரண்டாவது அலை பரவ ஆரம்பித்துள்ளது.
கொரோனாவின் வீரியத்தை நாம் முன்னரே அறிந்திருக்கிறோம்.
ஆகவே நாம் அனைவரும் முன்னேச்சரிக்கையுடன் நடந்துகொண்டு கரோனாவின் தாக்ககத்தில் இருந்து விடுபட அரசின்
கோட்பாடுகளையும், கட்டுப்பாடுகளையும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
தற்பொழுது தமிழக அரசு நாளை சனிக்கிழமை முதல் புதிய கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியுள்ளது.
பேருந்துகளில் அதிக அளவு பயணிக்கக் கூடாது என்றும், அதிக அளவு கூட்டங்கள் கூட கூடாது என்றும் கோவில்கள் இரவு 08.00 மணி வரை தான் திறந்திருக்கும் என்றும் அறிவித்து இருக்கிறது.
இச்சுழலில் சித்திரை மாதம் ஆரம்பிக்க இருக்கிறது. பொதுவாக சித்திரை மாதத்தில் திருக்கோவில்களில் சித்திரை திருவிழா தொடங்குகிற காலம், திருவிழா முடிந்தவுடன், வீதிஉலா நடைபெறும்.
வருகிற 14-ஆம்தேதி முதல் இஸ்லாமியர்களின் புனித நோன்பான ரம்ஜான் நோன்பு ஆரம்பிக்க இருக்கிறது.
கிறிஸ்துவர்கள் ஆலயங்களில் இரவு இறை வழிபாடு நடைபெறும்.
எனவே தமிழக அரசு இரவு 08.00 மணி வரை வழிபாடுத்தலங்கள் செயல்படும் என்று அறிவித்து இருப்பதை கரோனாவின் கோட்பாடுகள் மற்றும் கட்டுப்பாட்டுகளுக்கு உட்பட்டு இரவு 10.00 மணிவரை வழிபாடுத் தலங்கள் செயல்பட அனுமதி வழங்குவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து ஆவன செய்ய வேண்டும் என்று தமிழக அரசை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
பொது மக்கள் அனைவரும் தவறாமல் முக கவசங்களை அனிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், கைகளை அடிக்கடி கழுவி சுத்தப்படுத்தியும் கரோனா கட்டுப்படுத்தும் நடவடிக்கைளில் அரசின் கட்டுப்பாட்டுகளுக்கு உட்பட்டு ஒத்துழைப்போடு நடக்க வேண்டும்.
முன்னெச்சரிக்கையாக இருப்போம், கொரோனாவை ஒழிப்போம் என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்கள்.