மலேசியாவில் 1970களில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது இந்த “குற்றவாளி” படம்.அந்த காலகட்டத்தில் காதல் செய்த ஜோடிகளுக்கு சமுதாயத்தால் ஏற்பட்ட பிரச்சினைகள் பற்றியும் காதலர்களின் பெற்றோர்கள் இவர்களை ஏற்றுக் கொண்டார்களா இல்லையா இக்காதல் பிரச்சினையில் யார் குற்றவாளி என்பதைப் பற்றி விறுவிறுப்பாக போகும் கதை இது என பட குழுவினர் தெரிவித்தனர்
.இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் உள்ள பேராக் என்ற ஊரில் 1970 ம் ஆண்டு கிராமம் எப்படி இருக்குமோ அதே மாதிரி பழமையான செட்டிங் செய்து படமாக்கப்பட்டது.இப்படத்தை மலேசியாவில் வளர்ந்து வரும் பெண் இயக்குனர்
திராட்சை மற்றும் லோகேஸ் இணைந்து எடுத்த படம் தான் “குற்றவாளி”
இவர்கள் விருது பெற்ற பல தமிழ் குறும் படங்கள் இயக்கி உள்ளனர்.குறிப்பாக திராட்சை இயக்கிய நன்றி என்ற குறும்படம் 20க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில்
நடிகர்கள் திரிலோச்சேனன் தியாகராஜா புவனேஸ்வரி பிரபாகரன், சண்முகநாதன் ராஜூ, வேல் முருகன்,சதாசிவம்,
திராட்சை,
மோகன் ஷா, லென் முகிலன், நாகவள்ளி ஆகியோர் நடித்துள்ளனர்.கதை
சதாசிவம் எழுதியுள்ளார்
MUA & நடனஅமைப்பு திராட்சை செய்துள்ளார்.பாடல் வரிகளை
MC செந்தமிழன் எழுதியுள்ளார், பாடல் இசையமைப்பாளர்
செம்ம பீட்ஸ் ( Semma Beatz) மிக்ஸ் & மாஸ்டர் கனகேஸ்வரன் சுப்ரமணியம்,டப்பிங் ஸ்டுடியோ
Fmk ஸ்டுடியோ, காட்சி எஸ்.ஏ.சுகன் ராஜ்
கால்வின் ராஜ், உதவி இயக்குனர் பிரமிளா செல்வம், பாடல் வீடியோ
Avk Creationz , முதன்மை இயக்கம் திராட்சை செய்துள்ளார், இயக்கம்
லோகேஸ்வரன் இப் படம் விரைவில் மலேசிய நாடெங்கிலும் உள்ள திரை அரங்கங்களில் வெளியிட போகிறார்கள். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பல்வேறு தோன்றத்தில் நடிக்கும் வளர்ந்து வரும் நடிகர் திரிலோச்சேனன் தியாகராஜா அவர்கள் மலேசியாவில் பல்வேறு மலாய் தொலைகாட்சி தொடர்கள் ( Gerak Khas ) தமிழ் தொலைகாட்சி தொடர்களிலும் இனி வெளிவர கூடிய திரைப்படங்கிலும் நடித்துள்ளார். இனி வரக்கூடிய படங்களில் மலேசிய இயக்குனர்கள் இவரது நடிப்பாற்றலை கண்டிப்பாக வெளி கொண்டு வருவார்கள் என நம்பப்படுகிறது. இப்படத்தில வரும் இருபாடல்களான ஆட்டுக் குட்டி என்று தொடங்கும் பாடலும் மற்றும் கலங்குற.. கலங்குற என்ற பாடல்கள் மலேசியாவின் பிரபல வானொலி THR RAAGA வில் சக்கைபோடு போடுகிறது. மலேசிய தமிழ் மக்களின் பேராதவுடன் இப்படம் நல்ல வரவேற்ப்பு தரும் என நம்பபடுகிறது.