ஆதித் தமிழர்கள் பண்பாட்டையும் அமானுஷ்ய சக்திகளின் தத்ரூபங்களையும் படம் பிடித்துக் காட்டும் “பரமபதம்” திரைப்படம் இம்மாத இறுதியில் வெளியீடு.!!
மலேசிய வளரும் தமிழ் இயக்குனர்கள் விக்னேஷ் பிரபு – தனேஷ் பிரபு ஆகியோர் இணைந்து இயக்கிய சாய் நந்தினி மூவி வேல்டு – டீரீம் சாய் ஹோம் புரடக்ஷனின் ” பரமபதம் ” திரைப்படம் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளில் வரும் ஏப்ரல் 29 அன்று திரைக்கு வரவுள்ளது. புதிய கோணங்களில் நவீன தொழில் நுட்பத்தில் மலேசிய நாட்டில் சரித்திர புகழ் வாய்ந்த கடாரம், கோலாலம்பூர், பினாங்கு, மாநிலங்களில் படமாக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள (Magmyth Studios) அனிமேஷன் முறையில் படமாக்கப்பட்டது. இந்த நிறுவனம் நடிகர் கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன், தம்பி உள்பட ஹாலிவுட் மலையாள முன்னணி படங்களுக்குச் சிறப்பான அனிமேஷன் காட்சிகள் உருவாக்கியது. திரையரங்க அதிநவீன (5.1 – sound Tony J) சவுண்ட் சிஸ்டத்தில் இசை கோர்கபட்டது. மேலும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் குழுவில் உள்ள.. Bamba Bakiya – AR Rahman sir label record artist இந்தப் படத்தில் ஒரு காதல் பாட்டுப் பாடி உள்ளார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த எந்திரன் படத்திலும் நடிகர் விஜய் நடித்த படங்களிலும் பாடி உள்ளார். இந்தப் பரமபதம் படத்தில் தனேஷ் பிரபு, சசிவரூபன்,ரிஷி, பவித்ரன் ஆகிய நான்கு கதாநாயகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் மிரட்டும் வில்லனாக இப்பட இயக்குனர் விக்னேஷ் பிரபு நடித்துள்ளார், இப்படத்தில் நாயகியாக புதுமுகம் கொளசல்யா நடித்துள்ளார். பரமபதம் படத்தில் துணை கதாபாத்திரங்களாக கே.எஸ்.மணியம், பென் ஜி, அகோதரன், விமல், விக்கி நடராஜா, கவிமாறன், சிங்கை ஜெகன் நடித்துள்ளனர். இப்படத்தில் இசை அமைப்பாளராக நண்பர்கள் கூட்டணியில் பாலன் ராஜ், எம்.ஜெகதீஷ் பணிபுரிந்து உள்ளனர். எடிட்டிங் தனேஷ் பிரபு, மற்றும் இப்படத்தின் ஒளிப்பதிவினை ஜெகதிஷ்வரன் செய்துள்ளார். ஒப்பனை கலைஞர் சுவாதி, வாணி ஸ்ரீ பணிபுரிந்து உள்ளனர். இந்தப் பரமபதம் படத்தின் புரடக்ஷன் மேனேஜராக சாமராஜ் பணிபுரிந்துள்ளார். கதை-திரைக்கதை-இயக்கம் தனேஷ் பிரபு செய்துள்ளார். இப்படத் தயாரிப்பாளர்கள் மலேசியாவைச் சேர்ந்த டாக்டர் இலட்சப் பிரபு, டாக்டர் சக்கரவர்த்தி ஆவர். ஆதி தமிழர்களுடைய பாண்பாட்டை விளக்கும் அமானுஷ்ய சக்திகள் பற்றிய படமாக இந்த படம் எடுக்கபட்டுள்ளது. வாழ்த்துகள்.