காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவமனைக்கு10 ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவி- தைவான் நாட்டு பல்கலைக்கழகம் வழங்கியது.!!!

தொழில்நுட்பம்

காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவமனை கொராணா சிகிச்சை மையத்திற்கு தைவான் நாட்டின் தேசிய சிங் ஹுவா பல்கலைக்கழகம் 10 ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகளைஅன்பளிப்பாக வழங்கியுள்ளது.

எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் SRMIST(முன்னாள் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம்) உலக அளவில் பல்வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் கல்வி மற்றும் ஆராய்ச்சி பரிவர்தனைக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து உள்ளது.அதன்படி தைவான் நாட்டின் தேசிய சிங் ஹுவா பல்கலைக்கழகத்துடன்(National Tsing Hua University)செய்துள்ள ஒப்பந்தம் மூலமாக இந்த இரு கல்வி நிறுவனங்களும் பல்வேறு கல்வி பணிகள் செய்து வருகின்றன.

அதோடு காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவன வளாகத்தில் 2016ல் ஏற்படுத்தப்பட்ட தைவான் கல்வி மையம் மூலம் பல்வேறு கல்வி பரிவர்த்தனைகள் நடந்து வருகிறது.

உலகை அச்சுறுத்தி வரும் ஆட்கொல்லி நோயான கொரோணா நோய் தொற்றால்(COVIT 19) பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க  காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் 200 படுக்கைகளுடன் சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நோயாளிகளுக்கு உதவ தைவான் நாட்டின் தேசிய சிங் ஹுவா பல்கலைக்கழகம் முன்னாள் மாணவர் சங்கம் முன்வந்ததற்கு அப்பல்கலைக்கழக பேராசிரியர் ஹோசெங் அனுமதி வழங்கியதை தொடர்ந்து தேசிய சிங் ஹுவா பல்கலைக்கழகம் 10 ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

அந்த ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகளை எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இணை துணைவேந்தர் லெப்டினன்ட் கர்னல் டாக்டர் ஏ.ரவிக்குமார்,டீன் டாக்டர் ஏ.சுந்தரம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *