விண்ணில் சீறி பாய்ந்தது சந்திராயன் 2 விண்கலம்
சந்திராயன் 2 விண்கலம் கடந்த ஜூலை 15ஆம் தியதி விண்ணில் தயாராகி கவுண்டவுன் தொடங்கிய பின்னர் சரியாக 52நிமிடம் முன்னதாக ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டில் இருந்த குறைபாடு கண்டறியப்பட்டு விண்ணில் ஏவுவது நிறுத்தப்பட்டது இதை தொடர்ந்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்றது.
நிறுத்தப்பட்ட சந்திராயன் 2விண்கலம் மறுபடியும் விண்ணில் செலுத்துவதற்கு பல மாதங்கள் ஆகலாம் என கருத்துக்கள் வெளியாயின .இதை எல்லாம் முறியடித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகளின் கூட்டு முயற்ச்சியால் ராக்கெட்டில் உள்ள குறைகள் களையப்பட்டு மீண்டும் இன்று (ஜூலை 22) மதியம் 2.43க்கு விண்ணில் செலுத்துவதற்கு தயாராக்கப்பட்டு ஸ்ரீஹரிகோட்டா சதீஸ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் அதற்கான கவுண்டவுன் துவங்கப்பட்டு சரியான நேரத்தில் விண்ணில் செலுத்தப்பட்டது
நிலவில் மனிதனை அனுப்பும் ஆய்விற்காக சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்பட்டது சரியாக 3லட்சத்தில் 80ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் நிலவில் சென்று அடையக்கூடிய விண்கலம் 2022ஆம் ஆண்டு நிலவில் மனிதனை அனுப்புவதற்கான ஆய்விற்காக செலுத்தப்பட்டது. சந்திராயன் 2 விண்ணில் ஏவப்பட்தற்கு நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்கள்் பாராட்டு தெரிவித்தனர்