உலகையே அச்சுறுத்தும் கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மும்பை,
விஜயவாடா, ராஜ்கோட் மருத்துவமனைகளில் தீ விபத்தினால் உயிரிழப்புகள் ஏற்பட்டதனை
தொடர்ந்து, இது போன்ற நிலை தமிழகத்தில் ஏற்படாதவாறு முன்னெச்செரிக்கை
நடவடிக்கையாக இயக்குநர் முனைவர். திரு. சி. சைலேந்திரபாபு, இ.கா.ப, அவர்களின்
வழிகாட்டுதலின்படி, அனைத்து மருத்துவமனைகளையும், தீ பாதுகாப்பு நோக்கில் அலுவலர்கள்
ஆய்வு செய்தும், அரசு மருத்துவமனைகள் மற்றும் நந்தம்பாக்கம் போன்ற ஆக்ஸிஜன் படுக்கை
வசதி கொண்ட தற்காலிக மருத்துவ மையங்களில் ஊர்தி குழுவினருடன் பாதுகாப்பு பணி
மேற்கொண்டும், பிற மருத்துவமனைகளில் தீ பாதுகாப்பு நோக்கில் கண்காணிப்பு பணியும்
மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
மேலும், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, விழிப்புணர்வு
ஏற்படுத்தும் வகையில் “Fire Safety in Hospital” என்ற கருத்தரங்கு ஏற்கனவே, 01.04.2021
மற்றும் 30.04.2021 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டிருந்தது. தற்சமயம் அக்கருத்தரங்கில்
பங்குபெறாத மருத்துவமனைகள் மற்றும் புதியதாக கொரோனா சிகிச்சை அளிக்கும்
மருத்துவமனைகள் பயன்பெறும் நோக்கில், ஊரடங்கு காலத்தினை கருத்தில் கொண்டு,
காணொளி மூலம் 25.05.2021 அன்று இயக்ககத்தில் காலை சுமார் 10.30 மணியளவில்
இக்கருத்தரங்கு துவங்கியது. இக்கருத்தரங்கில் வாழ்த்தி பேசிய இயக்குநர் முனைவர்.
திரு. சி. சைலேந்திரபாபு, இ.கா.ப, அவர்கள் மருத்துவமனை பாதுகாப்பின் முக்கியத்துவம்
குறித்து எடுத்துக்கூறினார்கள்.
இக்கருத்தரங்கில், 1. திரு.எம். நமசிவாயம், மாவட்ட அலுவலர் (ஓய்வு),
மருத்துவமனை தீ விபத்தின் படிப்பினைகள், 2. திரு. எஸ். கோபகுமார், மருத்துவமனை
கட்டிடங்களில் மின் பாதுகாப்பு 3. திரு. ரவிசங்கர், ஆக்ஸிஜன் சிலின்டர்களை பாதுகாப்பாக
கையாளுதல் என்ற தலைப்புகளில் வகுப்புகள் நடத்தினார்கள்.
இக்கருத்தரங்கை கூடுதல் இயக்குநர் திரு. எஸ்.விஜயசேகர் அவர்கள்
இணையதள வழி மூலம் துவக்கிவைத்தார்கள். இக்கருத்தரங்கில் சென்னையில் உள்ள
கொரோனா சிகிச்சை அளித்து வரும் 207 மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்கள்
இணையதள வாயிலாக பங்கேற்றனர். இக்கருத்தரங்கினை இணை இயக்குநர்
திருமதி. ந.ப்ரியா ரவிச்சந்திரன் அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார்கள்.
இக்கருத்தரங்கு மிகவும்
பயனள்ளதாக இருந்தாக கலந்துகொண்ட
மருத்துவர்கள், நிர்வாகிகள் தெரிவித்தனர்.