விஜய் டி.வி சூப்பர் சிங்கர் டாக்டர் பிரியங்கா-ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த இலங்கை தமிழ் இளைஞர் பிரசாத் குமாருடன் இணைந்து கேம்ப் புரடக்ஷன் “உசிரே நீதாண்டி” என்ற இசை வீடியோவில் பாடியுள்ளார்.!!
ஆஸ்திரேலியா தலைநகர் மெல்பேர்னில் வசிக்கும் இலங்கையை பூர்விகமாக கொண்ட தமிழ் இளைஞர் பிரசாத் இவர் ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்துகொண்டே பல்வேறு இசைக்குழுவில் பாடிவருகிறார்.கனவே கலையாதே,காற்றெல்லாம் காதல் திருநாள்,அன்னையர் தினத்திற்காக அன்னையை போற்றும் தாய் மனசு, சினேகிதன், உள்பட 15க்கும் மேற்பட்ட தமிழ் இசை ஆல்பங்களில் பாடி இருக்கிறார். இவர் தற்பொழுது விஜய் டிவி சூப்பர் சிங்கர் பாடகி டாக்டர் பிரியங்காவுடன் இணைந்து “உசிரே நீ தாண்டி” என்ற இசை விடியோவில் பாடி இருக்கிறார். இந்த இசை வீடியோ வரும் 28ம் தேதி வெள்ளிக்கிழமை கேம்ப் புரடக்ஷன் யு டியூப் சேனலில் வெளியிடப்படுகிறது.
இசை – T.ப்ரியன்
Music PRO – ஆர்வின் பிரசாந்த்
பாடல் வரிகள் – இன்பம் அருளைய்யா ஒலியாக்கம் யாழ் என்டர்டைன்மென்ட் இணைந்து உருவாக்கியுள்ளனர்.இந்த இசை வீடியோவை பிரியங்கா-பிரசாந்த் குமாரு இணைந்து பாடிய இந்த இசை வீடியோ இசை ஆர்வலர்களிடம் அதிக வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.