தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 28,864 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள்நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 1,73,351 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.
அவற்றில் புதிதாக 28,864 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவையில் 3,537 பேருக்கும், சென்னையில் 2,689 பேருக்கும், ஈரோட்டில் 1,784 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள் அனைத்திலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,68,580ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் இன்று மேலும் 493 போ் பலியாகியுள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 23,754ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றிலிருந்து இன்று 32,982 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 17,39,280-ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 3,05,546 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு 29 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. பொதுமுடக்கத்தின் காரணமாக அடுத்து வரும் நாள்களில் பாதிப்பு எண்ணிக்கை மேலும் குறையலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.
சென்னையில் தொற்றுக்குள்ளாவோா் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து வருகிறது. மற்றொரு புறம் கரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் எண்ணிக்கை தமிழகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.