நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் ரிவால்டோ என்ற பெயரில் அழைக்கப்படும் கம்பீரமான ஆண் காட்டு யானைக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு தும்பிக்கையில் காயம் ஏற்பட்டது.
காயத்திலிருந்து மீண்டுவந்தாலும் தும்பிக்கையில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக மற்ற காட்டுயானைகளைப் போல காட்டில் இல்லாமல், குடியிருப்பை ஒட்டிய பகுதிகளையே உணவு தேவையைப் பூர்த்தி செய்து வந்தது.
மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இருந்தாலும், மனிதர்களைத் தாக்கியதேயில்லை. உணவு தேடி வரும் இந்த யானைக்கு உள்ளூர் மக்கள் பலரும் சட்டவிரோதமாக உணவளித்து வந்தனர்.
இந்நிலையில், இதே பகுதியில் உலவி வந்த எஸ்.ஐ என்ற ஆண் காட்டுயானை மீது, மசினகுடியில் சட்டவிரோதமாகச் செய்யப்பட்டு வந்த தனியார் தங்கும் விடுதியினர், எரியும் தீப்பந்தத்தைத் தூக்கியெறிந்ததில், துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தது.
ரிவால்டோ யானைக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகவும், மேலும் இந்த யானைக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகவும் தெரிவித்து ரிவால்டோவை பிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.