தென் சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் : ராகுல் காந்தி – கக்கன் ஜி பிறந்தநாள் விழா 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட்டம் .!!

சென்னை

தென் சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில்
ராகுல் காந்தி – கக்கன் ஜி பிறந்தநாள் விழா
1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட்டம் ஏராளமான ஏழை மக்கள் நலத்திட்டங்களை பெற்றுச் சென்றனர்.!

சென்னை.ஜீன். 20

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளையொட்டி, மாவட்ட தலைவர் அடையார் டி.துரை தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 50 வது பிறந்தநாளையொட்டி,
சென்னை அடையாரில், ஏழை எளிய மக்கள் 700 நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்விற்கு,
தென் சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அடையார் டி.துரை தலைமை தாங்கி ஏற்பாடு செய்திருந்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு நலத்திட்டங்களை வழங்கினார்.
இதேபோல், தரமணியில் 500 பேருக்கு,
பகுதி தலைவர் மணி, வட்ட தலைவர்கள் கண்ணன், முத்து செழியன், மாவட்ட துணை தலைவர் சார்லஸ் ஆகியோர் தலைமையில் மதிய உணவு வழங்கப்பட்டது.
இதேபோல், முன்னாள் அமைச்சர் கக்கன் ஜி பிறந்தநாளையொட்டி, அடையார் இந்திரா நகரில், ஏழை எளிய மக்களுக்கு சுமார் 300 க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள், உணவுகளை, மாவட்ட தலைவர் அடையார் டி.துரை வழங்கினார்.
இந்நிகழ்வில், முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு, துணைத் தலைவர் ஆர்.தாமோதரன், பொதுச்செயலாளர் கீழனூர் ராஜேந்திரன், வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மெளலானா,
மகிளா காங்கிரஸ் தலைவி சுதா, மாநில செயலாளர்கள் எல்.முனீஸ்வர் கணேசன்,
வாழப்பாடி கூ.ராமகண்னன், கடல் தமிழ்வாணன்,
மற்றும் கதிரேசன், பகுதி தலைவர்கள் மெக்கானிக் விஜயன்,ரகுசுந்தர்,ஆதி நாராயணன், வக்கில் விஷ்ணு குமார், ஸ்டீபன், மஞ்சு மாதா, வட்ட தலைவர்கள் ஜெயக்குமார், போலீஸ் குமார்,நாகராஜ், ராஜா,அசோக்,கெனட்ராஜ், விஜயகுமார்,பரிமளா, தமிழ்வாணன், சிவக்குமார், மகேந்திரன், ஜார்ஜ், ரவிச்சந்திரன், ஆ.டி.ஒ கண்ணன்,
பாண்டியன், சரவணன், கிறிஸ்டோபர்,
இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் மணிகண்டன்,
உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *