சென்னை திருவல்லிக்கேணி ஐஸ் அவுஸ் பெசன்ட் சாலையில் குடிநீர் பாதுகாப்பு வார நிகழ்வு  மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நடமாடும் வாகனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.!!

சென்னை

சென்னை திருவல்லிக்கேணி ஐஸ் அவுஸ் பெசன்ட் சாலையில் குடிநீர் பாதுகாப்பு வார நிகழ்வு
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு
நடமாடும் வாகனம்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
கொடியசைத்து துவக்கி வைத்தார்.!!

சென்னை.ஆக.30-

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு மற்றும் குடிநீர் பாதுகாப்பு வார நிகழ்வையொட்டி,
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு
நடமாடும் வாகனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து வைத்து, குடிநீர் தரத்தை ஆய்வு செய்தார்.

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில், திருவல்லிக்கேணி டாக்டர்.பெசன்ட் சாலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு மற்றும் குடிநீர் பாதுகாப்பு வார நிகழ்வினை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
முன்னதாக, மேளதாளத்துடன் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் பெறப்பட்ட கொரோனா நிவாரண நிதி ரூ.34,74, 320 உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.

பொதுக்குழாயின் குடிநீர் தரம் குறித்த ஆய்வு மகளிர் சுய உதவிக் குழு தன்னார்வலர்களால் மேற்கொள்ளப்பட்டது. மற்றும்
குடியிருப்புகளில் அமைக்கப்பட்டுள்ள
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஆகியவற்றையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார்.
மழைநீர் சேமிப்பு தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

பின்னர், மழைநீர் சேகரிப்பு மற்றும்
குடிநீர் பாதுகாப்பு அவசியம் குறித்த விழிப்புணர்வு அடங்கிய “மழைநீர் சேகரிப்பு மாதிரி நடமாடும் வாகனம் மற்றும் பிரச்சார வாகனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்து பார்வையிட்டார்.

 

பொதுமக்கள் உற்சாக வரவேற்பு :-

சட்டபேரவை தேர்தல் பிரச்சாரத்திற்கு பிறகு, முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் அரசு நிகழ்வை தொடங்கிவைக்க வந்ததால்,
டாக்டர்.பெசன்ட் சாலையில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீட்டின் மாடியில் நின்றுகொண்டு, முதல்வர் மு.க.ஸ்டாலினை பார்ப்பதற்காக சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக காத்திருந்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் மதியம் 12.05 மணி அளவில் வந்தார்.
அப்போது, மாடியில் நின்றுகொண்டிருந்த பெரியவர்கள் முதல் சிறியவர்கள் அனைவரும் உற்சாகமாக கைதட்டி, கையசைத்து வரவேற்பு அளித்து, விழாவை கண்டுகளித்தனர்.

மேலும், இந்நிகழ்வை யொட்டி திருவல்லிக்கேணி டாக்டர்.பெசன்ட் நகர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அப்பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.வங்கி வைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்வில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வே.வேலு,
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு,
மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்,
மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி,
மற்றும் திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு,திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் ஏ.ஆர்.பி.எம். காமராஜ், அவைத்தலைவர் காவே செழியன்,விபி பொண்ணரசு,கண்ணதாசன்,கா.வே.மோகன் மற்றும் ஏராளமான சேப்பாக்கம் திருவல்லிக்கேணி திமுக கழக நிர்வாகிகள்
கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *