நடிகர் ரமேஷ் கண்ணா மகன் திருமணம் சென்னையில் நடந்தது. ஏராளமான திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.!!

நடிகரும் இயக்குனர் திரைக்கதை ஆசிரியருமான திரு ரமேஷ் கண்ணாவின் மகனும் இயக்குனர் A.R முருகதாஸின் உதவியாளருமான S. ஜஸ்வந்த் & K பிரியங்கா ஆகியோரின் திருமணம் இன்று காலை சென்னை கோயம்பேடு ஶ்ரீவராகம் திருமண மண்டபதில் நடந்தது இந்நிகழ்ச்சியில் ஏராளமான இயக்குனர்கள், திரையுலக முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்

Continue Reading

சென்னையில் நடைபெறும் உலகத்தமிழ் வம்சாவளி மாநாட்டிற்கு மலேசிய தமிழர்களுக்கு அழைப்பு.!!

உலகத்தமிழ் வம்சாவளி மாநாட்டிற்கு மலேசிய தமிழர்களுக்கு அழைப்பு உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு (Global Organisation of Tamil Origin) ஆண்டுதோறும் உலகத் தமிழ் வம்சாவளி ஒன்றுகூடல் மாநாட்டை நடத்தி வருகின்றது. தொடர்ந்து இதுவரை நான்கு மாநாடுகளை நடத்தியுள்ளது. ஐந்தாவது மாநாடு- உலகத் தமிழர் திருநாள் விழாவாக ( 5th Annual World Tamilar Festival) மற்றும் உலகத்தமிழ் வம்சாவளி ஒன்று கூடல் சென்னையில் 2019 ஆண்டு ஜனவரித் திங்கள் 5, 6 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது. […]

Continue Reading

கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்னை விமான நிலைய உழியர்கள் நிவாரண உதவி!!!

கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்னை விமான நிலைய உழியர்கள் நிவாரண உதவி!!! கடந்த 25 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு புயல் மற்றும் கனமழை டெல்டா மாவட்டத்தை தாக்கியது.இதை தொடர்ந்து அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதநேய அடிப்படையில் உதவிகள் குவிந்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாக,கஜா புயலினால் பாதிக்கபட்ட மக்களுக்கு சென்னை விமான நிலைய ஊழியர் சேகரித்த நிவாராண உதவி பொருட்களை 3 லாரிகளில் மூலம் சென்னை விமான நிலைய வளாகத்தில் இருந்து இயக்குனர் சந்திரமவுலி கொடி அசைத்து […]

Continue Reading

நடிகை தன்ஷிகா இன்று தனது பிறந்த நாளை தனது சிலம்பாட்டம் குருவான பாண்டியன் மாஸ்டர் அவர்களின் இடத்தில் கொண்டாடினார்.!!

நடிகை தன்ஷிகா இன்று தனது பிறந்த நாளை தனது சிலம்பாட்டம் குருவான பாண்டியன் மாஸ்டர் அவர்களின் இடத்தில் கொண்டாடினார். தனது பிறந்தநாளின் முதல் நிகழ்வாக தனது குருவிற்கு வணக்கம் செலுத்தியவர் அங்கு குழுமியிருந்த பல்வேறு மாவட்ட ரசிகர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.இந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் நடன இயக்குனர் ஸ்ரீதர் கலந்து கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.மேலும் பல்வேறு தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் நடிகர் நடிகைகள் அலைபேசி வாயிலாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.ரசிகர்களின் அன்பிற்கிணங்க நிகழ்ச்சியின் […]

Continue Reading

ரஜினியை நேரில் சந்தித்த ஒலிம்பிக் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம்.!!

ரஜினியை நேரில் சந்தித்த மேரி கோம் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம். சென்னை வந்துள்ள இவர் நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியிருக்கிறார்.ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த், ஸ்ரீதயா அறக்கட்டளை சார்பில் குழந்தைகளுக்கான அமைதி என்ற நிகழ்ச்சியை சென்னையில் இன்று நடத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் பங்கேற்கிறார். இதற்காக சென்னை வந்த மேரிகோம், ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்திருக்கிறார். ரஜினிகாந்துடன் குத்து சண்டை போடும் விதமாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. […]

Continue Reading

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அமெரிக்காவில் ‘இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்’ என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.!!

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அமெரிக்காவில் ‘இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்’ என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிகாகோ நகரில் செயல்படும் குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கர் நிறுவனம் வழங்கும் இந்த விருதை, சிகாகோ நகரில் நேற்று நடைபெற்ற விழாவில் அமெரிக்க நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட செனட்டர் ராஜா கிருஷ்ணமூர்த்தி வழங்கினார். உலக அளவில் பல துறைகளில் சிறப்பாகச் செயல்படும் நபர்களைத் தேர்வு செய்து குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கர் நிறுவனம் இந்த விருதை வழங்கி வருகிறது. இந்த […]

Continue Reading

கவிஞர் வைரமுத்து மகன் கபிலன் வைரமுத்து தன் தந்தை மீதான குற்றச்சாட்டுக்கு விளக்க அறிக்கை!!

  ஒரு விவாதம் தொடங்கி இத்தனை நாட்களாக ஏன் எதுவும் பேசவில்லை என நண்பர்கள் சிலர் கேட்கலாம். எதையும் விரிவாக எழுதுகிற மனநிலை சில நாட்களாக வாய்க்கவில்லை. அதையும் மீறி இந்தப் பதிவு அவசியமென கருதுகிறேன். வெறுப்புணர்ச்சியை மையப்படுத்தாமல் தீர்வை மையப்படுத்துவதுதான் ஒரு முற்போக்கு இயக்கத்தின் முதல் வெற்றி. நான் என்பது மேற்கத்தியம். நாம் என்பது இந்தியம். நாடு எப்படி போனாலும் நான் நன்றாக இருக்கவேண்டும் என்பது மேற்கத்திய வாழ்க்கை முறை. நாடு நிம்மதியாக இருந்தால்தான் நாம் […]

Continue Reading

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் முன்னிலையில் ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்றார்.!!

  இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் முன்னிலையில் ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்றார்.!! பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கே நீக்கப்பட்டுள்ளார். அதிபர் சிறிசேனாவின் கட்சியும் இலங்கை அரசில் இருந்து விலகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளும் கூட்டணியில் ஏற்பட்ட பிளவு காரணமாக இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Continue Reading

சென்னையில் பரதநாட்டிய சலங்கை பூஜை விழா.!!

சென்னையில் பரதநாட்டிய சலங்கை பூஜை விழா.!! விஜயா ஆட்ஸ் அகடாமியின் 19வது ஆண்டு சலங்கை பூஜை விழா கலைமாமணி விஜயலஷ்மி முன்னிலையில் சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது.இந்த பிிரமண்ட நிகழ்ச்சிியில் ஏராளமான நாட்டிய மாணவிகள் பங்கு பெற்றனர்  சலங்கை பூஜையில் பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர் இதில் சிறப்பு விருந்தினராக கல்யாணி நாட்டிய கலா தாளாளர் V.R.மூர்த்தியும். அதன் இயக்குநர் ஹேமலதாமூர்த்தியும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

Continue Reading

சபரிமலைக்குச் செல்ல ஆயத்தம் 41 நாள் விரதத்தில் இளம் பெண்.!!

சபரிமலைக்குச் செல்ல ஆயத்தம் 41 நாள் விரதத்தில் இளம் பெண்.!! கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த ரேஸ்மா என்ற திருமணம் ஆன இளம் பெண் சபரிமலைச் செல்ல மாலையிட்டு விரதம் தொடங்கியிருக்கிறார். இதுபற்றி ரேஸ்மா கூறுகையில், “சபரிமலைக்குப் போகமுடியாது எனத் தெரிந்தும் ஆண்டுதோறும் 41 நாட்கள் விரதம் இருந்து வந்தேன். இப்போது கோர்ட் தீர்ப்பு வந்துள்ளதால் சபரிமலைக்குச் சென்று சுவாமியைத் தரிசிப்பதற்காக மாலையிட்டு விரதம் தொடங்கியுள்ளேன். 41- நாட்கள் விரதம் இருந்து சபரிமலை செல்லுவேன். மனிதனின் உடலில் […]

Continue Reading