தமிழகத்தில் 11 மாவட்டங்களில் தளர்வுகள் உடன் ஊரடங்கை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து தமிழக அரசு.!!!

தமிழகத்தில் ஊரடங்கை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் நோய்த்தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் என்னென்ன தளர்வுகள் என்பது குறித்து தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் தற்போது கொரோனா நோய்த்தொற்று பரவலாக பல மாவட்டங்களில் கட்டுக்குள் வந்துள்ளபோதிலும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் மட்டும் நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகமாகவே இருந்து […]

Continue Reading

மீன் அங்காடிக்கு வரும் வியாபாரிகள் அனைவரும் அடுத்த வாரத்துக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.!!!

மீன் அங்காடிக்கு வரும் வியாபாரிகள் அனைவரும் அடுத்த வாரத்துக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.கொரோனா ஊரடங்கு தளர்வுகளுடன் வருகிற 14-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காசிமேடு மீன்பிடி துறைமுக வளாகத்தில் அரசின் மொத்த வியாபாரத்துக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீன்பிடி வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் 12 ஆயிரத்து 52 பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் மீன் விற்பனை வளாகங்கள் […]

Continue Reading

வேல்ஸ் கல்வி நிறுவனங்கள் சார்பில் 1 கோடியே 1 லட்சம் ரூபாய் நன்கொடை.!!!

தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் கல்வி நிறுவனங்கள் சார்பில் 1 கோடியே 1 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. வேல்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர், வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் ஐசரி கே. கணேஷ், தனது மனைவி ஆர்த்தி கணேஷ் மற்றும் மகள் பிரீத்தா கணேஷ் ஆகியோருடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து, ரூ. 1 கோடியே 1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

Continue Reading

1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு உலர் பொருட்களாக வழங்கப்பட்டன.!!!

கொரோனா நோய்த்தொற்று காரணமாக 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த ஆண்டு மே மாதத்தில் சமைத்த சத்துணவுக்கு பதிலாக உலர் பொருட்களாக வழங்கப்பட்டன. இதற்கான உத்தரவை சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை முதன்மை செயலாளர் ‌ஷம்பு கல்போலிகர் பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் கூறி இருப்பதாவது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த ஆண்டு மே மாதத்தில் சமைத்த சத்துணவுக்கு பதிலாக உலர் பொருட்களாக வழங்கப்பட்டன. […]

Continue Reading

சென்னையில் எடப்பாடி பழனிசாமி – ஓ. பன்னீர் செல்வம் சந்திப்பு.!!!

சென்னையில் எடப்பாடி பழனிசாமி – ஓ. பன்னீர் செல்வம் சந்திப்பு! தமிழக எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், எடப்பாடி பழனிசாமிக்கும், கட்சியின் ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வத்துக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்ததாக தகவல்கள் வெளியாகி வந்தது. நேற்றைய கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொள்ளாதது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “அவர் இன்று(நேற்று) புது வீடு கிரகப்பிரவேசம் காரணமாக கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. இதில் வேறொன்றும் […]

Continue Reading

சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை.!!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. நேற்றைய தினம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.96.23-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.90.38-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி, சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 96.23 […]

Continue Reading

இந்திய பிரதமர் மோடியின் 7 ஆண்டுகால சாதனையை மக்களுக்கு எடுத்து சொல்லும் நிகழ்ச்சியில் கொரோனோ தொற்று பாதுகாப்பு பணியில் ஈடுபடும் முன் களப் பணியாளர்களுக்கு பா.ஜ.க மீனவர் பிரிவு சார்பில் மீன் மற்றும் பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்பட்டன.!!

இந்திய பிரதமர் மோடியின் 7 ஆண்டுகால சாதனையை மக்களுக்கு எடுத்து சொல்லும் நிகழ்ச்சியில் கொரோனோ தொற்று பாதுகாப்பு பணியில் ஈடுபடும் முன் களப் பணியாளர்களுக்கு பா.ஜ.க மீனவர் பிரிவு சார்பில் மீன் மற்றும் பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்பட்டன.!! இந்திய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 7 ஆண்டு கால சாதனையை மக்களுக்கு எடுத்து செல்லும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில மீனவர் பிரிவின் சார்பாக கொரானாநோய் பாதுகாப்பு பணியில் அல்லும் பகலும் அயராது பாடுபட்டு […]

Continue Reading

கல்லூரிகளில் ஆன்லைன் கல்வி புதிய விதிமுறை அமைக்கப்பட்டுள்ளது.!!!

கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய விதிமுறைகளை உருவாக்க 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கல்லூரி கல்வி இயக்குனர் பூர்ணசந்திரன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு ஜூன் 11ல் அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கலை மற்றும் அறிவியல், கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய கட்டுப்பாடுடன் கூடிய விதிகள் உருவாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Continue Reading

வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கொரோனா நோய் தொற்றால் சிங்கங்கள் கவலைக்கிடமாக உள்ளது ஒரு சிங்கம் பலி.!!!

வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும் ஒரு சிங்கம் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகத்தினுடைய கோரிக்கையை ஏற்று, மேற்படி சிகிச்சைக்காக மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவை தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் அனுப்பி வைத்தது. இந்நிலையில், 11 சிங்கங்களிடம் மூக்கு மற்றும் மலவாயிலிருந்து மாதிரிகள் மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மத்தியப் பிரதேசத்தின் போபாலில் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு நோய் தேசிய நிறுவனத்திற்கு […]

Continue Reading

சென்னை விமான நிலையத்தில் ரூ.70 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்-சுங்க அதிகாரிகள்.!!!

சென்னை விமான நிலையத்தில் ரூ.70 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருட்களை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். போதைப் பொருள் கடத்திவரப்படுவதாக வந்த தகவலையடுத்து, தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ் பர்க்கிலிருந்து தோகா வழியாக சென்னை வந்த கத்தார் ஏர்வேஸ் விமான பயணிகளை, சுங்க அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். இதையடுத்து அவை பறிமுதல் செய்யப்பட்டன.  உடனடியாக இருவரும் போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். விமானத்தில் வந்த 2 […]

Continue Reading