ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும்’டிரைவர் ஜமுனா’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!!

‘டிரைவர் ஜமுனா’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்! ஒரு நல்ல கதை தனக்கான நடிகர்களை தானாக தேர்ந்தெடுத்துக் கொள்ளும் என்பார்கள். அப்படித் தான் ‘டிரைவர் ஜமுனா’ கதை நடிகர்களைத் தேர்வு செய்து படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளது படக்குழு. தற்போது தமிழ், தெலுங்கு என தனக்கு வரும் கதாபாத்திரங்களுக்காக மெனக்கிட்டு, திரையில் உயிரூட்டி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ‘வத்திக்குச்சி’ படத்தின் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கவுள்ள இந்தப் படத்தை 18 ரீல்ஸ் நிறுவனத்தின் சார்பாக,பிரபல குழந்தைகள் நல […]

Continue Reading

கோவிட் காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மலேசிய இந்திய வம்சாவழி தமிழ் செவிலியருக்கு தபால் தலையை வெளியிட்டது மலேசியா அரசு.!!

மலேசியாவில் இந்திய வம்சாவழி தமிழ் பெண் செவிலியர் நிஷாவுக்கு கோவிட்காலத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக அவரை கவுரவிக்கும் விதமாக தபால் தலையை மலேசிய அரசு வெளியிட்டது.! மலேசிய சுகாதாரத்துறை அமைச்சர் தான்ஸ்ரீ டத்தோஸ்ரீ Dr.நூர் ஹிஷாம் பின் அப்துல்லா தமிழ் செவிலியர் நிஷாவின் தபால்தலையை வெளியிட்டார்.!! மலேசியாவில் உள்ள காஜாங் பொது மருத்துவமனையில் பணிபுரியும் இந்திய செவிலியர் திருமதி நிஷாவுக்கு கோவிட் பாதிப்பு காலத்தில் அயாராது பணிபுரிந்த இவரை பெருமைபடுத்தி இவருடைய உருவம் பொறித்த தபால் தலையை மலேசிய […]

Continue Reading

கொரோனோ விழிப்புணர்வு நிழ்ச்சியில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கலந்து கொண்டார்.!!

சென்னைமாநகர போலீஸ் கமிஷனர் இன்று காலை தியாகராய நகர் டாக்டர் தாமஸ் ரோடு அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அதிகாரிகளுடன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வழங்கினார். பொதுமக்களுக்கு முககவசங்கள் வழங்கியும் மற்றும் தொற்று கண்டறிதல் .தடுப்பூசி முகாம் துவக்கிவைத்தார். காவல்துறையினர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி உடன் இணைந்து பொதுமக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் கூடுதல் […]

Continue Reading

பாகுபலி பிரபாஸ் – பூஜா ஹெக்டே நடிக்கும் பன்மொழி படமான ராதே ஷியாம் இம்மாத இறுதியில்வெளியாகிறது.!!

  பாகுபலி பிரபாஸ்- பூஜா ஹெக்டே நடிக்கும் பன்மொழி படமான ராதே ஷ்யாம் இம்மாத இறுதியில் வெளியாகிறது.பல பண்டிகைகள், ஒரே காதல்’ என்று தலைப்பிட்ட புதிய போஸ்டருடன் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை கூறும் ராதே ஷியாம் குழுவினர் மற்றும் பிரபாஸ் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள திரைப்படமான ராதே ஷியாமின் போஸ்டர்கள் படம் குறித்த பரபரப்பை ஏற்கனவே உருவாக்கியுள்ளன. பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிக்கும் இப்படத்தின் முதல் பார்வை முதல் சமீபத்திய போஸ்டர் வரை அனைத்துமே […]

Continue Reading

கொட்டாச்சி நடிக்கும் “கண்ணதாசன்” படபூஜை நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.!!

Hash one Pictures சபரி பிரசாத் மற்றும் V.ரமேஷ் தயாரிப்பில் ப்ரியதர்ஷினி கதையில் விக்கி தாப்ஸ்-ன் இசை மற்றும் இயக்கத்தில் கொட்டாச்சி அண்ணமகன் கதாநாயகனாக நடிக்கும் கண்ணதாசன் படத்தின் பூஜை இன்று சென்னை திநகரில் உள்ள அகஸ்தியர் கோவில் காலபைரவர் சன்னதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரைக்கதை எழுத்தாளர் பிரசாந்த், ஒளிப்பதிவாளர் தீபன், படத்தொகுப்பாளர் sri வத்சன், அருண் விஷால் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.   -@Actor_Kottachi Starring #Kannadasan Shoot Started with Pooja Today […]

Continue Reading

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது..!!

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது..!! முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று பகல் 12 மணிக்கு கூட்டம் தொடங்கியது. இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உதயகுமார், விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக அரசு அமைத்துள்ள கொரோனா தடுப்பு நிபுணர் குழுவினர் கூட்டத்தில் பங்கேற்றனர். அதில் பல்வேறு வி‌ஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக 5 அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்கள். […]

Continue Reading

வி.ஜி.பி தமிழ்ச் சங்கத்தின் சார்பாக அமெரிக்காவில் நிறுவ அங்குள்ள தமிழ் சங்கங்களுக்கு 60 திருவள்ளுவர் சிலை களை வழங்கினார் வி.ஜி.சந்தோஷம்.!!

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக, வட அமெரிக்காவிலுள்ள 50 மாகாணங்களில் இயங்கும் 60 தமிழ்ச் சங்கங்களுக்கு 60 திருவள்ளுவர் சிலைகளை விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்கள் தலைமையில் வட அமெரிக்கா தமிழ்ச் சங்க பேரவையின் தலைவர் திரு.கால்டுவெல் வேள்நம்பியிடம் திராவிடர் கழகத் தலைவர் ஐயா கி.வீரமணி அவர்களும், கவிப்பேரரசு பத்மஸ்ரீ வைரமுத்து அவர்களும் இணைந்து திருவள்ளுவர் சிலைகளை வழங்கினா்.இந்நிகழ்வில் ஏராளமான தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Continue Reading

ஆதித் தமிழர்கள் பண்பாட்டையும் அமானுஷ்ய சக்திகளின் தத்ரூபங்களையும் படம் பிடித்துக் காட்டும் “பரமபதம்” திரைப்படம் இம்மாத இறுதியில் வெளியீடு.!!

ஆதித் தமிழர்கள் பண்பாட்டையும் அமானுஷ்ய சக்திகளின் தத்ரூபங்களையும் படம் பிடித்துக் காட்டும் “பரமபதம்” திரைப்படம் இம்மாத இறுதியில் வெளியீடு.!!   மலேசிய வளரும் தமிழ் இயக்குனர்கள் விக்னேஷ் பிரபு – தனேஷ் பிரபு ஆகியோர் இணைந்து இயக்கிய சாய் நந்தினி மூவி வேல்டு – டீரீம் சாய் ஹோம் புரடக்‌ஷனின் ” பரமபதம் ” திரைப்படம் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளில் வரும் ஏப்ரல் 29 அன்று திரைக்கு வரவுள்ளது. புதிய கோணங்களில் நவீன தொழில் […]

Continue Reading

 மாநாடு படம் சிம்புவுக்கு ஒரு மைல் கல்லாக அமையும் – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.!!

மாநாடு படம் சிம்புவுக்கு ஒரு மைல்கல்லாக அமையும் – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.!! மாநாடு படப்பிடிப்பு தளத்தில் சிம்பு, வெங்கட் பிரபுவோடு கலந்துரையாடும் போது எடுத்த புகைப்படத்தை சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. இப்படத்தை சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இதில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை கல்யாணி பிரியதர்‌ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார். இப்படத்தில் சிம்புவுடன் எஸ்.ஏ.சந்திரசேகர், […]

Continue Reading

தமிழகம் முழுவதும் வழிபாட்டு தலங்களை இரவு 10 மணி வரை திறந்திருக்க அரசு அனுமதி வழங்க வேண்டும்.! த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.!!

வழிபாட்டு தலங்களை இரவு 10 மணி வரை திறந்திருக்க அரசு அனுமதி வழங்க வேண்டும். த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் அவர்கள் வலியுறுத்தல்.!! இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்  ஜி.கே.வாசன் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது இந்தியாவில் கடந்த வருடம் கொரானாவின் பரவல் ஆரம்பித்து அனைத்து தரப்பு மக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். நாம் பெரிதும் நேசித்த உறவினர்களையும், நண்பர்களையும், தலைவர்களையும் இழந்தோம். மத்திய, மாநில அரசுகளின் தொடர் முயற்சியாலும், கட்டுப்பாடுகளாலும், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், மற்றும் அதிகாரிகளின் […]

Continue Reading