கொரோனா தொற்று ஒழிய வேண்டி 14கிலோ மீட்டர் அங்கப்பிரதட்சணம் செய்த பெண்.!!

  கொரோனா ஒழிய வேண்டி திருவண்ணாமலையில் 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிரிவலப்பாதையில் ஆந்திர பெண் அங்கப்பிரதட்சணம் செய்தார். ஆந்திரா மாநிலம் பீமவரம் ஊரைச் சேர்ந்த மாதவி என்பவர் கொரோனா வைரஸ் ஒழிய அண்ணாமலையாரை வேண்டிக் கொண்டு இன்று அங்கப்பிரதட்சணம் செய்தார். 45 வயதாகும் மாதவி¸ ஆந்திராவில் சொந்தமாக தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். தீவிர சிவ பக்தரான இவர் பாடல் பெற்ற சிவ தலங்களுக்குச் சென்று தரிசித்து வருகிறார். அண்ணாமலையார் மீது கொண்ட ஈர்ப்பால் […]

Continue Reading

க்ளப்ஹவுஸுக்குப் போட்டியாக “Live Audio Room” என்கிற புதிய வசதியை ஃபேஸ்புக் வெளியிட்டுள்ளது.!!

சமூக வலைத்தளத்தில் பல லேட்டஸ்ட் டெக்னாலஜி செய்யப்பட்டு வருகிறது அதன் தொடர்ச்சியாக கிளப் ஹவுஸ் மிகவும் பிரபலமாக தற்பொழுது இருக்கிறது இந்த க்ளப்ஹவுஸுக்குப் போட்டியாக “Live Audio Room” என்கிற புதிய வசதியை ஃபேஸ்புக் வெளியிட்டுள்ளது தற்போது அமெரிக்காவில் மட்டும் இவ்வசதி இருக்கும், பின் படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் விரிவுப்படுத்தபடும் என பேஸ்புக் நிர்வாகிகள் தெரிவித்தனர்

Continue Reading

பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்  முதல்வருக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை !!

  அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக முதல்வருக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. ஆண்டு தோறும் செப்டம்பர் 15ம் தேதி அன்று அறிஞர் அண்ணா பிறந்த நாளில் பத்தாண்டுக்கும் மேலாக உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்து […]

Continue Reading

அனைவருக்குமான அரசு என காட்டும் ஆளுநர் உரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பாராட்டு.!!

    விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் திமுக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்று சட்டமன்றத்தில் ஆளுநர் நிகழ்த்திய உரை இந்த அரசு அனைவருக்குமான அரசு என்பதை அடையாளப்படுத்துவதாக அமைந்துள்ளது. புதிய அரசாங்கத்தின் முன்னுரிமை, அதன் கொள்கை உறுதி ஆகியவற்றைப் புலப்படுத்தும் விதமாக ஆளுநர் உரை அமைந்திருப்பது மிகுந்த மனநிறைவை அளிக்கிறது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனமார பாராட்டி வரவேற்கிறோம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவுக் காலிப் பணியிடங்கள் […]

Continue Reading

பிரபல நடிகர் ஹம்சவிர்தனின் மனைவி காலமானார்.!!

  பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் மருமகளும், நடிகர் ஹம்சவிர்தன் மனைவியுமான சாந்தி ஹம்சவிர்தன் (42) இன்று காலமானார். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். கடந்த மாதம் சாந்திக்கு கொரோணா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா நெகடிவ் ஆனபிறகும் சாந்திக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இன்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார். தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்க்கு சாந்தியின் உடல் […]

Continue Reading

கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் சட்டபேரவை கூட்டம் தொடங்கியது.!!

தமிழ்நாட்டின் 16 -வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு கவர்னர் பன்வாரிலால் புரோகித்  உரையுடன் தொடங்கியது.கவர்னர்  தனது உரையை வணக்கம் என தமிழில் தொடங்கினார். மேலும், தமிழ் இனிமையான மொழி. எளிமையான வாழ்க்கையை வாழுங்கள் என்று பேசினார். சட்டசபை தோதலுக்கு பிறகு நடைபெறும் தமிழ்நாடு புதிய சபையின் முதல் கூட்டத்தொடர் என்பதால், கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றி தொடக்கிவைத்துள்ளார். கவர்னர் உரை நிறைவடைந்ததும், சட்டசபை கூட்டத் தொடரை எத்தனை […]

Continue Reading

கேரளாவில் கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாக, உணவகங்களுக்கு சென்று நேரடியாக உணவருந்தாமல் வாகனங்களில் இருந்தபடியே உணவருந்தும் புதிய ஏற்பாட்டினை கேரளா சுற்றுலா துறை ஏற்பாடு.!!

கேரளாவில் கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாக, உணவகங்களுக்கு சென்று நேரடியாக உணவருந்தாமல் வாகனங்களில் இருந்தபடியே உணவருந்தும் புதிய முயற்சியான, ‘இன் –கார் டைனிங்’ எனும் வசதியை கேரள சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் (கே.டி.டி.சி) தொடங்க உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் தங்கள் ஆர்டர்களை கே.டி.டி.சியின் அஹார் உணவகங்களில் செய்தவுடன், நிறுத்தப்பட்ட வாகனங்களில் உள்ள பயணிகளுக்கு உணவக பணியாளர்கள் மூலமாக உணவு வழங்கப்படும். இந்த திட்டம் மூலமாக மெனுவில் உள்ள சிற்றுண்டிகள், காலை உணவு, மதிய […]

Continue Reading

காருக்குள் உட்கார்ந்து கொண்டே கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் அப்போலோ நிறுவனம் புதிய ஏற்பாடு.!!

மருத்துவமனைக்குள் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமே என்ற ஒரு தயக்கமே, பலரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் இருந்து தாமதப்படுத்தி வருகிறது. இந்தத் தயக்கத்தை சரி செய்யும் வகையில், அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மையத்தில், தற்காலிகமாக வாகனத்தில் சென்று தடுப்பூசி செலுத்திக் கொண்டு திரும்பும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். இதன்படி, மருத்துவமனைக்குச் செல்லும் ஒருவர், தனது காரிலிருந்து கீழே இறங்காமலேயே தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். தடுப்பூசி […]

Continue Reading

ஒலிம்பிக் ஓட்ட பந்தய வீரர் உசேன் போல்ட் தந்தையர் தினத்தில் வெளியிட்ட படம்.!!

ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த 34 வயதான உசைன் போல்ட், 2008, 2012 மற்றும் 2016 ஒலிம்பிக்கில் 8 தங்க பதக்கங்களை வென்றுள்ளார். உலகின் அதிவேக மனிதர் என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர். ஒலிம்பிக் பதக்கம் உட்பட தனது விளையாட்டு கெரியரில் 23 தங்கத்தை தட்டி தூக்கியுள்ளார் போல்ட். இந்நிலையில், தந்தையர் தினமான நேற்று தனது குடும்பத்தின் புகைப்படத்தை அவர் பகிர்ந்திருந்தார். அதில் அவரது மனைவி கேசி பென்னட் மற்றும் மூத்த மகள் ஒலிம்பியா லைட்னிங் உள்ளனர். அவர்களுடன் இரண்டு […]

Continue Reading

ராகுல் காந்தி பிறந்த நாளையொட்டி திநகர் ஸ்ரீராம் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.!!

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளையொட்டி தி. நகர் பகுதியில் கரோனாவினால் வாழ்வாதாரம் இழந்த ஏழை எளிய 300 குடும்பங்களுக்கு ஒரு வாரத்திற்கு வேண்டிய அரிசி, பருப்பு, மளிகை, காய்கறி பொருட்களை தி. நகர் ஸ்ரீராம் வழங்கினார். முன்னதாக மேற்கு மாம்பலம் காக்கும் கரங்களில் உள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கு மதிய உணவு, மாற்று திறனாளிகளுக்கு நல உதவிகள், பெண்களுக்கு சேலைகள், மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் சானிடைசர், முககவசம் போன்றவற்றை தி. […]

Continue Reading