கொரோனா தொற்று ஒழிய வேண்டி 14கிலோ மீட்டர் அங்கப்பிரதட்சணம் செய்த பெண்.!!

தமிழகம்

 

கொரோனா ஒழிய வேண்டி திருவண்ணாமலையில் 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிரிவலப்பாதையில் ஆந்திர பெண் அங்கப்பிரதட்சணம் செய்தார். ஆந்திரா மாநிலம் பீமவரம் ஊரைச் சேர்ந்த மாதவி என்பவர் கொரோனா வைரஸ் ஒழிய அண்ணாமலையாரை வேண்டிக் கொண்டு இன்று அங்கப்பிரதட்சணம் செய்தார். 45 வயதாகும் மாதவி¸ ஆந்திராவில் சொந்தமாக தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். தீவிர சிவ பக்தரான இவர் பாடல் பெற்ற சிவ தலங்களுக்குச் சென்று தரிசித்து வருகிறார். அண்ணாமலையார் மீது கொண்ட ஈர்ப்பால் 15 வருடத்திற்கு முன்பு திருவண்ணாமலைக்கு வந்து தங்கி விட்டார். தனது பெயருக்கு முன்னால் அருணாச்சலம் என்பதையும் சேர்த்துக் கொண்டு ஆன்மீக பணியாற்றி வருகிறார்.

அன்னதானம்¸ வஸ்திரதானம் வழங்கி ஆன்மீக சேவையாற்றி வரும் அருணாச்சல மாதவி ஏழை மாணவ-மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகையையும் வழங்கி வருகிறார். மேலும் 63 நாயன்மார்கள் குறித்து புத்தகம் ஒன்றையும் எழுதி வருகிறார்.

இவர் ஏற்கனவே, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 3 முறை அங்கப்பிரதட்சணம் செய்திருக்கிறார். இன்று 4வது முறையாக கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்கள் குணமடைய வேண்டி திருவண்ணாமலை 14 கிலோ மீட்டர் தூரமுள்ள கிரிவலப்பாதையில் அங்கப்பிரதட்சணம் செய்தார்.

“அருணாச்சலம்¸ அருணாச்சலம்” என்ற பக்தி முழக்கத்துடன் வெயிலில் அவர் அண்ணாமலையார் மலையை சுற்றி உருண்டு வந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *