இஸ்லாம் சகோதர சகோதரிகளுக்கு பக்ரீத் தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்
உலக நாடுகள் முழுவதும் இஸ்லாம் சமயத்தவர்கள் இறைத்தூதர் இப்ராஹிம் மற்றும் அவரது புதல்வன் அவர்களது புனிதமும் அர்ப்பணிப்பும் ஒருங்கே இணைந்த வாழ்வை எண்ணி தியாகத்தின் மேன்மையைப் போற்றும் நல்லதொரு நாள் பக்ரீத்
பலியிடல் தியாகத் திருநாளின் ஒரு சிறப்பம்சம் ஆகும். இந்த நாளில் இசுலாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிடுகின்றனர். பின்னர் அதன் இரைச்சியை மூன்று சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டார் மற்றும் நன்பர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பலியிடப்படும் விலங்கு ஊனம் இல்லாமலும், குறைந்தபட்சம் ஒரு வயது பூர்த்தியானதாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்படுகின்றது
வரலாற்றை போற்றுகின்ற வகையிலும் இறைநம்பிக்கையே மேம்படுத்துகின்ற வகையிலும் இந்த நாள் கொண்டாடப்பட்டு அதன் மூலமாக கிடைக்கும் நன்மைகளை தன் குடும்பத்தாருக்கும் தன்னை சார்ந்த மற்ற உறவுகளுக்கும் நம்முடைய நாட்டிற்கும் கொடுத்து உதவுமாறு இறைத்தூதர் இப்ராஹிம் அவர்களிடம் நாம் அனைவரும் வேண்டிக் கொள்வோம்
பொதுச்செயலாளர்
மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம்