ஓணம் விழாவை ஒட்டி யாரும் சபரிமலைக்கு பக்தர்கள் யாரும் வரவேண்டாம் பாதைகள் சேதமடைந்திருக்கின்றன என தேவசம்போர்டு அறிவிப்பு.!!.

தமிழகம்

*ஓணத்தையொட்டிப் பக்தர்கள் யாரும் சபரிமலை கோவிலுக்கு வரவேண்டாம் – திருவிதாங்கூர் தேவசம் போர்டு!*

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் சாலைகள் கடுமையாச் சேதமடைந்துள்ளதால் பக்தர்கள் கோவிலுக்கு வர வேண்டாம் எனத் திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேட்டுக் கொண்டுள்ளது.

ஆண்டுதோறும் ஓணம் திருநாளையொட்டி வழிபாட்டுக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குப் பக்தர்கள் செல்வது வழக்கம். மழை வெள்ளம் மண்சரிவு ஆகியவற்றால் கேரளம் முழுவதும் பேரழிவு ஏற்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் சாலைகள் சேதமடைந்துள்ளதாகவும், பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்து சாலையின் குறுக்கே கிடப்பதாகவும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

பம்பையாற்றில் இன்னும் வெள்ளத்தின் அளவு குறையவில்லை என்றும், இதனால் வழிபாட்டுக்காக பக்தர்கள் சபரி மலைக்கு வர வேண்டாம் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *