திமுகவில் நடக்க உள்ள உட்கட்சி தேர்தலுக்கு இன்று வேட்புமனுத்தாக்கல் செய்யலாம் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.!!

தமிழகம்

 

திமுக பொதுக்குழு தலைவர் பொருளாளர் பதவிக்கு இன்று வேட்புமனுத்தாக்கல்.. யார் போட்டியிடுவார்.!!

திமுகவில் நடக்க உள்ள உட்கட்சி தேர்தலுக்கு இன்று வேட்புமனுத்தாக்கல் செய்யலாம் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது. தலைவர் , பொருளாளர் பதவிக்கு நடக்கும் தேர்தலுக்கு இன்று வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

திமுக பொதுக்குழு ஆகஸ்ட் 28ல் நடைபெறும் என்று திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர், பொருளாளர் தேர்தல் நடைபெறும் என்று க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

இந்த கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடக்க உள்ளது. தலைவர், பொருளாளர் பதவிகளுக்கான வேட்பு மனுக்கள் இன்று 10 மணி முதல் மாலை 4 மணி வரை பெற்றுக்கொள்ளப்படும். 27ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்குள் வரை வேட்பு மனுக்களை திரும்பப்பெறலாம்.

28ம் தேதி வாக்குப்பதிவு நடக்கும்.

இதில் திமுக பொதுக்குழுவில் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவு உள்ளவர் வெற்றிபெறுவார். இதனால் தற்போது திமுக உட்கட்சி தேர்தலுக்கு இன்று வேட்புமனுத்தாக்கல் தொடங்கியுள்ளது.

பொதுக்குழு கூட்டத்தில் தலைவர், பொருளாளர் பதவிக்கு தேர்தல் நடக்க உள்ளது. தலைவர் பதவிக்கு தற்போதைய செயல் தலைவர் ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் திமுகவினர் பரபரபாக உள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *