சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று மாலை ஊடக- பத்திரிக்கையாளர்களுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின்படி வெள்ள நிவாரணத் தொகை மற்றும் 20 கிலோ அரிசி மற்றும் சமையல் பொருட்கள் உள்பட மழை கோட்டு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல் கட்டமாக 500 பேருக்கு வழங்கினார். இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர்பாபு சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் பத்திரிக்கையாளர் மன்ற செயலாளர் பாரதி தமிழன்,சென்னை பத்திரிகையாளர் மன்ற மூத்த நிர்வாகி அசத்துல்லா மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் மறைந்த பத்திரிக்கையாளர் குடும்பத்தினர்களுக்கும் நிவாரணத் தொகை 20 கிலோ அரிசி மற்றும் சமையல் பொருட்களை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 500க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஒரு சில பத்திரிகையாளர்களுக்கு வழங்கிவிட்டு வேறு நிகழ்ச்சிக்கு சென்றவுடன் பத்திரிகையாளர் மன்ற செயலாளர் பாரதி தமிழன், மூத்த நிர்வாகி அசத்துல்லா மேலாளர் ஜேக்கப் மற்றும் ஊழியர் அன்பழகன் நலத்திட்ட பொருட்களை ஒருங்கிணைத்து அமைச்சர் சிலருக்கு வழங்கி விட்டு சென்றவுடன் இவர்கள் மற்ற பத்திரிகையாளர்களுக்கு வழங்கினர்.
