திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் நடந்த தங்க தேரோட்டத்தை பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர்.!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பெண் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தங்க ரதத்தில் வீதி உலா வந்த மலையப்ப சுவாமியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 6 வது நாளான இன்று 32 அடி உயரமுள்ள பாயும் குதிரையுடன் கூடிய தங்க ரதத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மகா லட்சுமியின் செரூபமாக பெண்கள் விளங்குவதாலும் தங்கம் என்பது மகாலட்சுமிக்கு உரித்தானது என்பதாலும் பெண் பக்தர்கள் தங்க ரதத்தை வடம் பிடித்து இழுத்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா, கோவிந்தா என்ற முழக்கத்துடன் வழிபாடு செய்தனர்.