தமிழக அரசு நினைத்தால் ஒரே நாளில் தமிழ் ராக்கர்ஸை ஒழித்து விடலாம் என திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்
இளையராஜா 75 நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்ற நிலையில் அதற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து விஷால் நன்றி தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஷால், நன்றி தெரிவித்த கையோடு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளையும் வைத்ததாக கூறினார். பார்த்திபன் விலகல் விவகாரம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, ஏ.ஆர்.ரஹுமானையும், இளையராஜாவையும் ஒரே மேடையில் நிறுத்தியது பார்த்திபன் தான் எனவும், நிகழ்வுக்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அதில் கலந்து கொள்வதும், கலந்து கொள்ளாததும் அவரவர்களின் விருப்பம் எனவும் தெரிவித்தார். மேலும் கடவுளாக நினைக்கக்கூடிய தமிழக அரசு நினைத்தால், ஒரே நாளில் தமிழ் ராக்கர்ஸை ஒழித்துவிடலாம் எனவும் விஷால் தெரிவித்தார்
பேட்டி – விஷால்
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திரைப்பட சம்மேளன தொழிலாளர் சங்கத்தலைவர் ஆர்.கே.செல்வமணி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24 ஆம் தேதி, பையனூரில் அம்மா திரைப்பட படப்பிடிப்பு தளம் தொடங்க இருப்பதாகவும் அதனை அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க முதல்வருக்கு அழைப்பு விடுத்ததாகவும் தெரிவித்தார்
பேட்டி – ஆர்.கே.செல்வமணி