பொதுமக்கள் இருக்கும் இடத்திலிருந்தே காவல் துறையினரிடம் புகார் அளிக்க வசதியாக டி.ஜி காப் மொபைல் செயலியில் CCTNS சேவைகள் அறிமுகம்.!!

சென்னை தொழில்நுட்பம்

பொதுமக்கள் இருக்கும் இடத்திலிருந்தே காவல் துறையினரிடம் புகார் அளிக்க வசதியாக
டி.ஜி காப் மொபைல் செயலியில் CCTNS சேவைகள் அறிமுகம்.!!


சென்னை பெருநகர காவல் துறையின் டிஜிகாப் மொபைல் செயலியில் CCTNS (Crime and Criminal Tracking Network Systems) சேவைகள் புதிதாக இணைக்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையர் அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் இந்தச்செயலியின் புதிய சேவைகளை தமிழக காவல் கூடுதல் இயக்குநர் தலைமையிடம் திருமதி.சீமாஅகர்வால், இ.கா.ப அவர்களின் முன்னிலையில் அறிமுகம் செய்து வைத்தார்.
பொதுமக்கள் இருக்கும் இடத்திலிருந்தே காவல் துறையினரிடம் புகார் அளிக்க இந்தப் புதிய சேவைகள் உதவுகின்றன. மேலும் புகாரின் தற்போதைய நிலை ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் FIR/CSRன் தற்போதைய நிலை, வாகனங்களின் மீது வழக்கு பதியப்பட்டிருந்தால் அதைப்பற்றிய தகவல் ஆகியவற்றை இப்பொழுது டிஜிகாப் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் சேவைகளின் மூலம் அறியலாம்.

இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., (தெற்கு) ஏ.அருண், இ.கா.ப., (போக்குவரத்து) ஆர்.தினகரன், இ.கா.ப., (வடக்கு) காவல் இணை ஆணையாளர்கள் நஜ்மல்ஹோடா, இ.கா.ப., (போக்குவரத்து/வடக்கு), திருமதி.சி.மகேஸ்வரி, இ.கா.ப, (தெற்கு மண்டலம்) திருமதி.விஜயகுமாரி, இ.கா.ப., (மேற்கு மண்டலம்), ஆர்.சுதாகர், இ.கா.ப., (போக்குவரத்து/தெற்கு), அன்பு, இ.கா.ப., (மத்திய குற்றப்பிரிவு), திருமதி.ஜெயகௌரி, இ.கா.ப., (கிழக்கு மண்டலம்), காவல் துணை ஆணையர்கள் , NASSCOM GCC அமைப்பின் தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *