சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் சுவாமி விவேகானந்தர் திருவுருவச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.!!
சுவாமி விவேகானந்தர் திருவுருவ வெண்கல சிலையை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திறந்து வைத்தார்
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது.!!
நான் பார்த்த பல்வேறு சிலைகளில் இந்த சிலைதான் மிக கம்பீரமாக நிற்கிறது என்றும் , ஆளுநர் மாளிகையில் உள்ள அனைத்து வலிகளும் விவேகானந்தர் சிலை நோக்கி வருவது சிறப்பம்சமாக உள்ளது என்றும் ,விவேகானந்தரின் செயல்கள் எனக்கு அரசியலில் எனக்கு உந்து சக்தியாக இருந்தது என்று ஜெயலலிதா பேசியதை தான் இங்கு நினைவு கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
இந்த விழாவில கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்,என்றும் உலக நன்மைக்காக எல்லாவற்றையும் விட்டவர் சுவாமி விவாகணத்தார் ,சிகாகோவில் அவர் நிகழ்த்திய உரை உலகையே அவர் பக்கம் திரும்பி பார்க்க வைத்து சமய சர்பற்றப்பிகொள்கைய அன்றே எடுத்துறைத்தவர் விவேகானந்தர் அவர்கள் என்றும் அவர் கூறினார் ,உலக அரங்கில் இந்து மதத்தின் பெருமையை தன் சொற்பொழிவால் எடுத்துறைத்தவர் விவேகானந்தர்
உலகத்தின் மிக பெரிய உன்னதமான மனிதரான சுவாமி விவேகானந்தர் சிலையை திறந்து வைப்பது எனக்கு பெருமையாகவும் மகிழ்சியாகவும் உள்ளது,என்றும் மேலும் இந்த நல்வாய்ப்பை அளித்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்,விவேகானந்தர் காட்டிய வழியில் மாணவர்கள் பயணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார் விவேகானந்தர் சிலையை திறந்தால் நான் பாக்கியம்பெற்றேன் என அவர் பேசினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், பிஜேபி மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், இல. கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.