மக்கள் நீதி மய்யம் கட்சி துவங்கி இன்றுடன் ஓரு ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. இதை கொண்டாடும் விதமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் கட்சிக்கொடியேற்றி தொண்டர்கள் முன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்
மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு வயதாகிறது என்றும் இந்த உரை மிக சுருக்கமாக இருக்க வேண்டியது என் கடமை என்றும் ஏனெனில் பள்ளிக்குழந்தைகள் காத்துக்கொண்டிருக்கின்றனர் என்றும்
நான் பள்ளிக்கு போகாத பிள்ளையாக இந்த தெருவில் திரிந்தவன் என்றும் கூறினார்.
மேலும் மக்கள் நீதி மய்யத்திற்கு கொஞ்ச கொஞ்சமாக இந்த கூட்டம் கூடியுள்ளதாக தெரிவித்த அவர் நாங்கள் பேராசை பட்டோம் அதையும் மிஞ்சும் அளவிற்கு நம் கட்சி முன்னேறியுள்ளதாகவும் நமக்கு என்ன என்று இருந்த மக்கள் தற்போது வெளியில் வந்துள்ளதாகவும்
அரசியல் உதவாக்கரை உடைந்து மக்கள் பெருக்கெடுக்கும் போது குளம் வேறு ஆறு வேறு அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்ற தேர்தலில் தனியே நிற்போம் என்று கூறியது நான் அல்ல நாம் என்று கூறிய அவர்
மக்கள் பலம் மக்கள் நீதி மய்யத்திற்கு இருப்பதாகவும் எந்த கணிப்பு என்ன சொன்னாலும் மக்கள் என் கையைப் பிடித்து புத்துயிர் இருக்கிறது என்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
புரியக்கூடாது என்ற எண்ணத்தில் இருந்தவர்கள் அவர்கள் என்று கூறிய அவர் நான் என் ஸ்ருதியை அதிகப்படுத்தியுள்ளேன் என்றும் இன்னும் வரும்காலத்தில் கணக்கு வழக்குகளுடன் அது வலுப்பெறும் என்றுன்
ஊழல் எங்கே என்று கேட்பவர்களுக்கு உலகம் பதிலளித்துக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
களம் தயாராக உள்ளதாக என்று கேள்வி கேட்கின்றனர் அவர்கள் நேரில் வந்து சுவைத்து பார்க்கட்டும் என்று தெரிவித்த அவர் மோதி( மோடி) என்கிற வார்த்தையை பயன்படுத்த நான் விரும்பவில்லை என்றும் கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் நீதி மய்ய தொண்டர்கள் கலந்து கொண்டனர்