சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் “துரோணாச்சாரியா” நாடகத்தை ஆங்கிலத்தில் மாணவ-மாணவிகள் அரங்கேற்றினர்.!!
கர்ணா, வாலிவதம், பீஷ்மா, லங்கேஷ்வர ராவணா, குருசேத்திரா, ரகுவம்சம், கிருஷ்ணா, சுந்தரகாண்டம், சக்ரவியூகா, அனுமான், சிவா, கடோத்கஜன், இரணிய சகோதரர்கள், மற்றும் பரசுராமா ஆகிய நாடகங்களை தொடர்ந்து 15வது படைப்பாக “துரோணாச்சாரியா” நாடகத்தை மாணவர்கள் அரங்கேற்றினர்.
தெய்வத்திற்கு அடுத்த நிலையில் வைத்து வணங்கப்படுபவர் குரு. அப்படி ஒப்பற்ற குருவாகத் திகழ்ந்த துரோணாச்சாரியாரின் வாழ்க்கை நிலை, மாணவர்களுக்கு கற்பிக்கும் திறன், எடுத்துக் கொண்ட சபதத்தை முடித்துக் காட்ட மேற்கொண்ட முயற்சி என்று அனைத்தையும் மாணவ-மாணவிகள் உணர்ச்சிகரமாக நடித்து துரோணாச்சாரியார், மற்றுமுள்ள கதாபாத்திரங்களை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தினர்.
துரோணாச்சாரியார் நாடகத்தை இயக்குனர் ஜெயக்குமார் இயக்க, வசனம் குமரவேல்-தீபிகா, இசை பால் ஜேக்கப், மேடை அமைப்பு தோட்டா ரோகிணி, ஒளி விளக்கு லாரன்ஸ் ஆகியோர் அமைத்திருந்தனர்.
செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின் தாளாளர் மற்றும் செயலருமான குமாரராணி மீனா முத்தையா வழிகாட்டுதலின் பேரில் பள்ளியின் முதல்வர் அமுதலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் நாடகத்தை உருவாக்கியிருந்தனர்.