மக்கள் நீதி மய்யம் கட்சியின்
‘2ஆம் ஆண்டு துவக்க விழா’ மற்றும் பிரமாண்ட பொது கூட்டம். திருநெல்வேலியில் நடைபெற்றது.!!
சென்னை பிப்ரவரி 28
மக்கள் நீதி மய்யம் கட்சியின்
‘2ஆம் ஆண்டு துவக்க விழா’ மற்றும் பிரமாண்ட பொது கூட்டம். திருநெல்வேலியில் கோலாகலமாக நடைபெற்றது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது
நாங்கள் ஒன்றும் பாஜகவின் பி டீம் (ஆதரவு கட்சி) அல்ல. மக்கள் நீதி மய்யம் என்பது தமிழ்நாட்டின் ஏ டீம் (முன்னணி கட்சி). இங்கு 40 (மக்களவை )தொகுதிகள் மட்டுமல்ல; தேர்தல் நடக்கவிருக்கும் 60 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.
மோடிக்கு எதிராக தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து வருகின்றன. எனக்கொன்றும் அவர்கள் வலுவாக இருப்பதுபோன்று தெரியவில்லை. விரைவில் அந்த கட்சிகள் சிதறிச் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு.
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார். ஸ்டெர்லைட் விவகாரத்தில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்தார். இந்த பிரமாண்ட கூட்டத்திற்கு
தமிழகத்தில் 21 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். மக்களவை தொகுதிகள் 39 உள்ளன. இந்த இரண்டையும் குறிப்பிட்டு கமல்ஹாசன் 60 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறினார்.அரசியலுக்கு வந்துள்ள கமல், பொது வாழ்விலும் வெற்றி பெற வாழ்த்துவதாக ரஜினிகாந்த் ட்விட் செய்திருக்கிறார். மொத்தத்தில் தமிழக அரசியல் களம் சூடாகியுள்ளது. இந்த பிரமாண்ட கூட்டத்திற்கு சென்னை மண்டல பொறுப்பாளர் கமீலா நாசர் உத்தரவுக்கிணங்க தென் சென்னை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கிருபாகரன் தலைமையில். தென்சென்னை கிழக்கு மைலாப்பூர் தொகுதி 122,123,173 வட்டம் சார்பில் 122வது வட்டம் சார்பில் தொகுதி பொறுப்பாளர் திருமதி புஷ்பலதா ரமேஷ்,மயிலாப்பூர் வடக்கு 123 வது வட்டம் சார்பில்
பகுதி பொறுப்பாளர் திரு. பைக். ரமேஷ் மற்றும் பொறுப்பாளர்கள்
திரு. மின்னல் ரமேஷ்
திரு. ஆனந்தன்
திரு. சரவணன்
திரு. பாலச்சந்தர்
திரு. பிரகாஷ்
திரு. கமல்ஜிசினிவாசன்
திரு. வாசுதேவன். 122வது பொறுப்பாளர் ஆளவந்தான் யோகநாதன், மயிலாப்பூர் 173ம் வட்ட சார்பில் பகுதிப் பொறுப்பாளர் கேசவன் மற்றும் கள பொறுப்பாளர்கள் சேகர், ராஜேந்திரன், தனசேகர், அன்புமணி உள்பட ஏராளமானவர்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலங்கரிக்கப்பட்ட பேனர்களை டெம்போ டிராவலர் வேனில் கட்டி பூஜை செய்து பொறுப்பாளர்கள் அனைவரும் திருநெல்வேலி பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ஆணைக்கிணங்க சென்றனர்.