சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற போவதாக கூறி பல ஆயிரம் கோடி ரூபாய்களை கடலில் போட்டு வீணாக்கியது திமுக அரசு துணை முதல்வர் பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு.!!

சென்னை

சென்னை ஏப்ரல் 6
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற போவதாக கூறி பல ஆயிரம் கோடி ரூபாய்களை கடலில் போட்டு வீணாகியது திமுக அரசு துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு. தென் சென்னை அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜே.ஜெயவர்தனுக்கு வாக்கு சேகரிக்க துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மயிலாப்பூர் பகுதியில் வீதி வீதியாக வாக்கு சேகரித்தார். லாயிட்ஸ் சாலை சந்திப்பில் நேற்று பிரச்சாரத்திற்கு வந்த துணை முதல்வருக்கு மாவட்ட செயலாளர் விருகை வி.என்.ரவி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இப்பிரச்சாரத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள், மகளிர் அணியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்பொழுது அவர் பேசியதாவது இந்தியாவிலேயே மிகச்சிறந்த சமூக திட்டங்களை கொண்டு வந்தது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில்தான். மத்திய அரசில் அங்கம் வகிக்காமல் பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்தவர்தான் ஜெயலலிதா 10 ஆண்டுகளாக மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக எந்த உருப்படியான திட்டங்களையும் கொண்டு வரவில்லை.சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற போவதாக கூறி பல ஆயிரம் கோடி ரூபாய்களை கடலில் போட்டு வீணாக்கியது திமுக அரசு அத்திட்டம் சரி வராது என ஜெயலலிதா அப்பொழுதே எச்சரித்தார். காவேரி நடுவர் மன்ற தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று எதிர்க் கட்சித் தலைவராக இருந்தபோது ஜெயலலிதா பலமுறை வலியுறுத்தினார்கள். அதை அப்பொழுது திமுக கண்டுகொள்ளவே இல்லை அவர்கள் நினைத்திருந்தால் ஒரே நாளில் அரசிதழில் இடம்பெற செய்திருக்கலாம் அதை அவர்கள் செய்ய தவறிவிட்டனர். ஏனென்றால் அவர்களுக்கு நாட்டு நலத்தை விட தங்கள் நலத்தையே பெரிதாக எண்ணினர் இவ்வாறு ஓ பன்னீர்செல்வம் பேசினார். இப்பிரச்சாரத்தில் கூட்டணி கட்சியினர் பாஜக, தேமுதிக, பாமக, சமத்துவ மக்கள் கட்சியினர் ஏராளமான கூட்டணிக் கட்சியினர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *