
மலேசியாவில் புதிய முயற்சியாக நவீன தொழில்நுட்ப உதவியுடன் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட ரன்ஷிகா என்டர்பிரைசஸ் வழங்கும் வெள்ளி இரவு குறும்படம் தமிழ் புத்தாண்டு அன்று யூ டுயூப்பில் வெளியிடப்பட்டது.!!
https://youtu.be/2x2Oyaf92wA
கோலாலம்பூர் ஏப்ரல் 14
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் தமிழ் புத்தாண்டு அன்று மலேசிய தமிழ் பட இயக்குநர் தயாளன் மாரிமுத்துவின் ரன் ஷிகா என்டர்பிரைஸ் வழங்கும் வெள்ளி இரவு திகில் படத்தின் குறும்படம் மலேசிய முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
ரன்ஷிகா என்டர்பிரைசஸ் மற்றும் சிகரம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் வெள்ளி இரவு குறும்படம் வெளியீட்டு விழா கோலாலம்பூரில் கோலாகலமாக நடந்தது. இதற்கு முன்பு இந்த ரன்ஷிகா நிறுவனத்தின் நடந்தது என்ன?, நிலா, அடைப்பு, மற்றும் தமிழ் பட நடிகர்களை வைத்து மலாய் குறும் படமும் இயக்கி உள்ளனர். மலேசியாை நாட்டின் கோலாலம்பூரை சேர்ந்த இயக்குனர் தயாளன் மாரிமுத்து தற்போது இயக்கும் சமுதாயத்தில் நடக்கும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுத்த குரும்படம் வெள்ளி இரவு திகில் குறும்படத்தில் மலேசிய புதுமுக நடிகர்கள் ரன்ஷிகா என்டர்பிரைசஸ் குழுவை சேர்ந்த இப்படத்தின் இயக்குனர் தயாளன் மாரிமுத்து, இணை இயக்குனர் கோபால், கேமராமேன்கள் ராஜா, வினாயகமூர்த்தி இசை நாதன். நடிகர்கள் தயாளன் மாரிமுத்து, நாதன், முனியாண்டி, பால்கோ, ராய், மாலா ராபர்ட், உதயா, மகேஷ், மற்றும் பல கலைஞர் இப்படத்தில் பணியாற்றுகின்றனர். படம் பார்ப்பவர்களை அதிர வைக்கும் இசையுடன், படத்தை பார்ப்பவர்களை பயமுறுத்தும் காட்சிகளில் புதுமுக நடிகர்கள் சிறப்பாக நடித்திருந்தனர். உண்மை சம்பவமாக இந்த படத்தில் காலம் காலமாக இந்தியத் தமிழர்களும் மலேசியத் தமிழர்களும் பணத்திற்காக கெட்ட வழியில் தீய சக்திகளிம் சிக்கி வாழ்க்கையை இழந்தவர்களுக்கான கதை இது. இந்த திகில் படத்தை காண youtube, facebook பக்கத்தில்..https://m.facebook.com/story.php?story_fbid=862668430739885&id=100009902078077


