நடிகர் சங்க கட்டிட பணிகளை தடுக்க நினைப்பவர்களின் எண்ணம் ஈடேறாது விஷால் காட்டமான பேட்டி.!!
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வரும் ஜூன் 23ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதில் பாண்டவர் அணி சார்பில் விஷால், பூச்சி முருகன், குஷ்பு, கோவை சரளா,லதா, மனோபாலா உள்ளிட்ட பலர் வேட்புமனு தாக்கல் செய்த பின்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்த விஷால் பேசுகையில் நடிகர் சங்க கட்டிட பணிகளை தடுக்க சிலர் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் அதை நாங்கள் நடக்க விட மாட்டோம். இன்னும் 4 அல்லது 6 மாத காலத்தில் கட்டடத்தை கட்டும் பணிகள் முழுமையாக முடிவடைந்து கட்டிடம் திறக்கப்படும். இந்த பணிகள் நிச்சயம் நிறைவேறும். எங்கள் நடிகர் சங்கம் அரசியலுக்கு அப்பாற்றபட்டது. இச்சங்கத்தில் இருப்பவர்கள் யாரும் கட்சி சார்ந்து இல்லை. நடிகர் சங்கம் கட்டட திறப்பு விழா பற்றியும் மற்றும் மரியாதை நிமித்தமாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வத்தையும் சந்திக்க உள்ளோம் என்று அவரது பேட்டியில் கூறினார்.